படிப்புக்கு ரூ.2 கோடி... கல்யாணத்துக்கு ரூ.1 கோடி!

ஃபைனான்ஷியல் பிளானிங்கா.முத்துசூரியா

புவன் தொடர்ந்து பேசுவதைக் கேட்போம்.

“எனக்கு 32 வயது. டெக்ஸ்டைல் இன்ஜினீயராக பணிபுரிகிறேன். மாதம் பிடித்தம் போக ரூ.1 லட்சம் சம்பளம். என் மனைவி சிந்துஜா எம்இ பட்டதாரி. தற்போது வீட்டு நிர்வாகத்தை கவனித்துக் கொள்கிறார். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள் சம்யுக்தாவுக்கு 3 வயது. அடுத்த குழந்தை பிறந்து இப்போதுதான் மூன்று மாதங்கள் ஆகிறது. பெயர் நித்ரா.

நான் வீட்டுக் கடன் மூலமாக இரண்டு வீடுகள் வாங்கியுள்ளேன். ஒரு வீட்டுக்கான கடனைக் கட்டி முடித்துவிட்டேன். வாடகை வருமானமாக ரூ.5,000 வருகிறது.  இன்னொரு வீட்டுக்கடனுக்கு மாதத் தவணை ரூ.27,000 செலுத்தி வருகிறேன். இன்னும் ரூ.9 லட்சம் செலுத்த வேண்டும். இப்போது ரூ.5 லட்சத்தை மொத்தமாக செலுத்தலாம் என நினைக்கிறேன்.  இது குறித்த உங்களின் ஆலோசனை தேவை. அடுத்த  ஐந்து வருடத்தில் நகருக்கு மிக அருகில் என் கனவு வீட்டை ரூ.75 லட்சம் செலவில் கட்ட ஆசை.  இதற்கு  வீட்டுக் கடன் வாங்கத்  திட்டமிட்டு உள்ளேன். நாணயம் விகடன் படிக்கத் தொடங்கியபின், மாதம் ரூ.4,000 எஸ்ஐபி-ல் முதலீடு செய்து வருகிறேன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்