முயல் வளர்ப்பு!

குறைந்த முதலீட்டில்... அதிக வருமானம் தரும்...லாபம் தரும் தொழில்கள்!த.சக்திவேல்

முன்பைவிட விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு இப்போது புதிய வரவேற்பு கிடைக்கத் தொடங்கி உள்ளது. அதிலும் குறிப்பாக, கால்நடை வளர்ப்புத் தொழிலுக்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது. ஆடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு போன்ற தொழில்கள்,  இன்றைக்கு இளைஞர்கள் தேடி வந்து செய்கிற தொழில்களாக மாறிவிட்டன. அந்த வகையில், முயல் வளர்ப்பும் லாபத்தை அள்ளித் தருகிற தொழிலாக சமீப காலமாக மாறத் தொடங்கி இருக்கிறது. குறைந்த முதலீடு, குறைந்த இடவசதி, குறைந்த அளவில் தேவைப்படும் ஆட்கள், நல்ல லாபம் என பல சாதகமான விஷயங்கள் இந்தத் தொழிலில் இருப்பதால், பலரும் இந்தத் தொழிலை செய்யத் தொடங்கி இருக்கின்றனர்.

தற்காலத்தில் அசைவம் சாப்பிடாத ஆட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மக்கள் தொகை பெருகிய அளவுக்கு ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளின் எண்ணிக்கை பெருகவில்லை. இதனால் இறைச்சிக்காக வளர்க்கப்படுகிற உயிரினங்களின் தேவை அதிகமாகவே இருக்கிறது. ஆடு, கோழி போல முயல் கறியையும் மக்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்து இருக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்