ஷேருச்சாமி: பாசிட்டிவ் சந்தை... இது முதலீட்டுக்கு ஏற்ற நேரம்!

ஷேருச்சாமி சொல்லும் 5 காரணங்கள் 

‘‘பட்ஜெட் அப்ப ஷேருச்சாமியை பார்த்தோம். அந்த நேரத்துல நிஃப்டி கிட்டத்தட்ட 6,980 லெவல்ல இருந்துச்சு. நாலு மாசத்துல கிட்டத்தட்ட 1,300 புள்ளிகள் ஏற்றத்தை சந்திச்சு, இப்ப 8,200 லெவல்ல இருக்குது. இப்ப மேல போகுமா, கீழ போகுமான்னு தெரியல. பிரெக்சிட், ரெக்சிட்டுன்னு பயமுறுத்துறாங்க. உள்ளூர் நிகழ்வுகளும் சந்தையைக் கொஞ்சம் அலைக்கழிக்கவே செய்யுது. சந்தையை மட்டுமா, அது நம்மளையும் இல்ல போட்டுப் பாக்குது!’’ என்று எனக்கு நானே பேசிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் பார்த்து செல்லிடமிருந்து போன் வந்தது.

‘‘என்ன அறிவு எப்படி இருக்கீங்க?’’ என்றான்.

‘‘என்னடா திடீருன்னு மரியாதை கூடுது?’’ என்றேன்.

‘‘இல்லே, ஷேருச்சாமியை போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடலாமான்னு நினைக்கிறேன். மார்க்கெட் ஏத்த, எறக்கமா இருக்குல்ல. நீங்க என்ன நெனைக்கிறீங்க பாஸ்?’’ என ரொம்பவும் பணிவாக கேட்டான் செல்.

மரியாதை கூடும்போதே ஏதோ கோரிக்கையை வைக்கப் போகிறான் என நினைத்தேன். அது சரியாகிவிட்டது.  என்றாலும் நம் எண்ணமும் அதுதானே! இந்த நேரத்தில் சாமியை சந்தித்தால், நல்லாத்தான் இருக்கும் என்று நினைத்து. ‘‘சாமி, நாளைக்கு உங்களை சந்திக்க வரலாமா?’’ என ஒரு வாட்ஸ் அப் மெசேஜைத் தட்டினேன். அடுத்த சில நிமிடங்களில், ‘‘யெஸ். நாளை இரவு டின்னருக்கு வரவும்’’ என பதில் வந்தது. உடனே செல்லுக்கு அடுத்த எஸ்.எம்.எஸ்-ல் செய்தி அனுப்பினேன்.

அடுத்த நாள் மாலை ஏழு மணிக்கு சாமியை பார்க்க அவருடைய பங்களாவுக்குப் போனோம். வராந்தாவில் அமர்ந்திருந்த சாமி உற்சாகமாக வரவேற்றார். உட்கார்ந்த அடுத்த நிமிடமே வெளிர் பச்சை நிறத்தில் ஜூஸ் வந்தது. குடித்தால் அது கரும்பு ஜூஸ். ஆரம்பமே இனிப்பாகப் போகுதே என நினைக்கும்போதே, ‘‘என்ன திடீருன்னு வந்திருக்கீங்க?’’ என ஆரம்பித்தார் சாமி.

‘‘சாமி, பட்ஜெட் அப்ப வந்தோம். எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு சொன்னீங்க. அது மாதிரியே சந்தையும் மேலே போச்சு. அதுக்கப்புறம் நிறைய செய்திகள் சந்தையைப் பாதிக்கிற மாதிரி வந்துச்சு. மொரீஷியஸ் நாட்டுடன் போட்ட டபுள் டாக்சேஷன் அக்ரிமென்ட், ப்ரெக்சிட், ரெக்சிட் என பல விஷயங்களும் மனசை ஒரு கலக்கு கலக்குது. அதனாலதான் உங்களைப் பார்த்து ட்ரெண்ட் எப்படி இருக்குமுன்னு கேட்டுட்டுப் போயிட்டா, கொஞ்சம் நிம்மதியா இருக்கலாமுன்னு பார்த்தோம்’’ என்றான் செல். நானும் அதற்கு தலையசைத்து வைத்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்