ஷேர்லக்: பைபேக் செய்யும் லார்ஜ் கேப் நிறுவனங்கள்!

ஓவியம்:அரஸ்

ம் கேபினுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக ‘‘பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற நேரம் - ஷேருச்சாமி சொல்லும் 5 காரணங்கள்’’ என்கிற அட்டையைப் பார்த்தார் ஷேர்லக். ‘‘டைமிங்காகத் தான் அட்டைப்படக் கட்டுரையைப் போட்டிருக்கிறீர்’’ என்று நம்மை சின்னதாகப் பாராட்டி விட்டு, நம் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தயாரானார்.

‘‘ஒரு வழியாக ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிவிட்டதே, இதனால் நம் சந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?’’ என்று கேட்டோம்.

‘‘வெள்ளிக்கிழமை காலையில் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. இதில் சுமார் 400 புள்ளிகள் திரும்ப ஏற்றம் கண்டது. நிஃப்டி 7950 புள்ளிகளுக்கு கீழ் இறங்கியது. வர்த்தக முடிவில் 8088 புள்ளிகளுக்கு அதிகரித்தது. இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொண்டு வரும் நாடுகளில் 12-வது பெரிய நாடாக இங்கிலாந்து உள்ளது. இந்த ஆண்டில் இந்தியா 1450 கோடி டாலருக்கு (ஏற்றுமதி 880 கோடி டாலர், இறக்குமதி 570 கோடி டாலர்) வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. ஐடி, பார்மா, மெட்டல்ஸ், ஆட்டோ, கேப்பிட்டல் கூட்ஸ் துறை, ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். ஐடி நிறுவனங்கள் என்கிறபோது ஐரோப்பாவில் அதிக வர்த்தகம் மேற்கொண்டு வரும், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனங்களின் செயல்பாடு பாதிக்கப்படக்கூடும். 

ஆட்டோ துறை நிறுவனங் களுக்கு உடனடி பாதிப்பில்லை. ஆனால், நீண்ட காலத்தில் நிச்சயம் பாதிக்கப்படும். குறிப்பாக, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் ஈரோப், மதர்சன் சுமி போன்ற நிறுவனங்களின் விற்பனை குறைவதோடு செயல்பாட்டுச் செலவுகளும் அதிகரிக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இதேபோல், வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களும் அதிகமாக பாதிக்கப்படும்.

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அதிகம் பாதிப்புக்கு உள்ளாகாது. 2016-17-ல் ரூபாய் மதிப்பு ஏறக்குறைய 71-ஆக இருக்கும். இதனால் ஐரோப்பா வில் இயங்கிவரும் இந்திய வங்கிகள் குறுகிய காலத்தில் பாதிக்கப்படும். குறிப்பாக, எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளைக் குறிப்பிடலாம். நல்ல பருவ மழை, ஜிஎஸ்டி போன்ற சீர்திருத்தங்களால் இந்திய நிறுவனங்களின் வளர்ச்சி மேம்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், இந்தியப் பங்குச் சந்தை ஏற்றம் காணும். எனவே, சந்தை இறங்குகிற சமயத்தில் எல்லாம் நல்ல அடிப்படை உள்ள பங்குகளை தொடர்ந்து வாங்கிச் சேர்ப்பது நல்லது. தனிப்பட்ட பங்குகளை கண்டறிய முடியாதவர்கள் அல்லது முதலீடு செய்யத் தயங்குபவர்கள் இண்டெக்ஸ் குறியீடுகளில் முதலீடு செய்யலாம். அதன் மூலம் அதிக லாபம் பெறவில்லை என்றாலும் ஓரளவு நல்ல வருமானத்தை எதிர் காலத்தில் பார்க்கலாம்’’ என்ற வருக்கு சூடான ஏலக்காய் டீ தந்தோம்.

‘‘டெக்ஸ்டைல் துறை மேம்பாட்டுக்கு மத்திய அரசு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கி உள்ளதே, இதனால் அந்தத் துறை எழுச்சி காணுமா?’’ என்று கேட்டோம்.

‘‘சமீப காலமாக பருத்தி விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் டெக்ஸ்டைல் துறை பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சரவை டெக்ஸ்டைல் துறைக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்க அனுமதி அளித்துள்ளது. டெக்ஸ்டைல் துறை இந்தியாவின் மிகப் பெரிய வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி துறையாக இருக்கிறது. இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் பணியாளர்களின் ஊதியம் மற்றும் நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட இருப்பதால், டெக்ஸ்டைல் துறையில் அடுத்த மூன்று ஆண்டு களில் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

இந்த அறிவிப்பை அடுத்து டெக்ஸ்டைல் துறைப் பங்குகள் ஏற்றமடைந்து வர்த்தகமாயின. அவற்றில் சில 52 வார உச்சத்தை எட்டின. ஆனால், இந்த ஏற்றம் நிரந்தரமல்ல என்பதை முதலீட்டாளர்கள் மனதில் கொள்வது அவசியம். காரணம், பல பங்குகளில் பி/இ விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது. கிடெக்ஸ் கார்மென்ட்ஸ், இண்டோ கவுன்ட் இண்டஸ்ட்ரீஸ், வெல்ஸ்பன் இந்தியா, மாக்ஸ்வெல் இண்டஸ்ரீஸ், கேஜி டெனிம், சங்கம் இந்தியா, ஹிமாட்சிங்கா சைடு, சோமா டெக்ஸ்டைல்ஸ் அண்ட் இண்டஸ்ரீஸ், சியாராம் சில்க் மில்ஸ், ஆர்எஸ்டபிள்யூஎம், செலிபிரிட்டி பேஷன்ஸ் போன்ற பங்குகளின் மதிப்பீடு மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம்’’ என்றார்.

‘‘அடுத்தடுத்து ஐபிஓ என ஒரே ஐபிஓ சீசனாக இருக்கிறதே?’’ என்றோம்.

‘‘உண்மைதான். காஸ் விநியோக நிறுவனமான மஹாநகர் காஸ்-ன் ஐபிஓக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 64 மடங்குக்கு விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருக்கிறது. பங்கு விலைப் பட்டை ரூ.380-421-ஆக இருக்கிறது. இந்த நிறுவனம், இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய நேச்சுரல் காஸ் விற்பனை நிறுவனமாக இருக்கிறது. இதன் தாய் நிறுவனமாக கெயில் இந்தியாவில் இருப்பது கூடுதல் பலம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்