பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர் குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ் :

ரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவது தொடர்பான வாக்கெடுப்பில், இங்கிலாந்து (பிரிட்டன்) வெளியேற அதிக வாக்கு பெற்றிருக்கிறது. எதிர்பாராத இந்த முடிவால் இந்திய சந்தைகள்  அதிர்ச்சி அடைந்து இறக்கம் கண்டது என்றே சொல்லலாம்.

இந்த செய்திக்குமுன் இந்திய சந்தையில் டிரேடர்களும், முதலீட்டாளர்களும் மிக ஜாக்கிரதையாக வர்த்தகங்கள் மேற்கொண்டதை பார்க்க முடிந்தது. பிரிட்டன் பிரச்னையை முன்னிட்டு கடந்த புதன்கிழமை  பல குறுகிய கால வர்த்தக நடவடிக்கைகள் நடந்ததை பார்க்க முடிந்தது. அந்த வர்த்தக நடவடிக்கைகளால் நிஃப்டி வேகமாக 8300 என்கிற புள்ளிகளை தொட்டு வர்த்தகமானது.

இந்த செங்குத்தான சந்தை ஏற்றத்தால், பெரும்பாலான ஷாட் பொசிஷன்கள் விற்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து பிரிட்டன் வாக்கெடுப்பு நடந்து,  பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டதால், சந்தையை தாங்கிப் பிடிக்க யாரும் இல்லை. அதனால்தான் சந்தை திடீரென கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவ்வளவு பெரிய சரிவுகளை சந்தித்தது.

ஆக, தற்போது நம் முன்னால் இருக்கும் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், இந்த இறக்கம் எவ்வளவு தூரம் தொடரும் என்பது தான். நிஃப்டி 7950 புள்ளிகளுக்கு இறங்கியபோது மே 24, 2016 அன்றைய நிலையில் இருந்து சுமாராக 62 சதவிகிதம் ஏற்றம் கண்டிருந்தது. எனவே 7950 தான் தற்போதைக்கு ஏறி இறங்கக் கூடிய ரிட்ரேஸ்மென்ட் இடமாக வைத்துக் கொள்ள முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்