நிஃப்டி எதிர்பார்ப்புகள்: ஏற்ற இறக்கங்கள் அதிகமாக வரலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

செய்திகளும் நிகழ்வுகளுமே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாய் அமையும் என்றும் 7950 மற்றும் 8300 என்ற ரேஞ்ச் பவுண்ட் நிலைமை யிலேயே நிஃப்டி டெக்னிக்கலாக தொடர வாய்ப்புள்ளது என்ற நிலைமை தொடர்கிறது என்றும் தொடர்ந்து செய்திகள் நெகட்டிவ்வாக வந்தால் வேகமான இறக்கத்தை சந்தித்து 7747 லெவலை தாண்டி கீழே சென்றால் 7475 லெவல்களில் மட்டுமே சிறியதொரு சப்போர்ட் இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு, செய்திகளின் மீது தொடர்ந்து கவனம் வைத்தே வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும் என்றும் சொல்லியிருந்தோம்.

7927 என்ற குறைந்தபட்ச லெவலையும், 8285 என்ற அதிகபட்ச லெவலையும் கண்ட நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 81 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது. பிரெக்சிட் நிகழ்வின் காரணமாக வெள்ளியன்று வேகமான இறக்கத்தை சந்தித்த நிஃப்டி  சிறியதொரு ரிவர்சலை சந்தித்து 8088.60-ல் முடிவடைந்தது.

வரும் வாரம் எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி வாரம். அதற்கான வாலட்டை லிட்டி வரும் வாரத்தில் இருக்கும். 8100 லெவல்களுக்கு கீழே இருக்கும் வரை மீண்டும் 7740 வரையிலுமான வேகமான இறக்கம் எப்போது வேண்டும் என்றாலும் வரலாம் என்ற சூழ்நிலையே டெக்னிக்கலாக இருக்கின்றது எனலாம்.

8280 லெவலைத் தாண்டி வால்யூமுடன் இரண்டுக்கும் மேற்பட்ட குளோஸிங்குகள் வராத வரை இறக்கம் முடிவடைந்துவிட்டது என்று சொல்ல முடியாத நிலையே தொடரும். இனி வரும் செய்திகள் சந்தையை நன்றாகவே பாதிக்கும் வாய்ப்பிருப்பதால் செய்திகளின் மீது தொடர்ந்து கவனம் வைத்தே வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்