மைக்ரோ தொடர் - 2

மு.சா.கெளதமன்பதஞ்சலியின் விஸ்வரூபம்... பாபாஜியின் பிசினஸ் ஸ்ட்ராட்டஜி!

தஞ்சலியின் பதார்தா உற்பத்தி ஆலையை சுற்றிப் பார்ப்பதற்கான அனுமதி பெறுவதே திருப்பதி ஏழுமலை யானை, வைகுண்ட ஏகாதசி அன்று பொது தரிசனம் வழியில் சென்று தரிசிப்பதற்கு சமமாக இருக்கிறது; அவ்வளவு கெடுபுடி.

மூன்றடுக்கு செக்யூரிட்டி!

பதார்தா உற்பத்தி ஆலையில் நுழைந்தவுடன் ஒரு தற்காலிக ஐடி வழங்கப்படுகிறது. அதில் நம் மொத்த விவரங்களும் இருக்கும். குறிப்பாக, பதஞ்சலி ஆஸ்ரமத்திலிருந்து நம்மைப் பரிந்துரைத்தவர் மற்றும் நாம் பதார்தா ஆலையில் யாரை சந்திக்க வேண்டும் என்பது வரை எல்லா விவரங்களும் இருக்கிறது. யாரை சந்திக்க வேண்டும் என்று ஏற்கெனவே அனுமதி வாங்கி இருக்கிறோமோ, அவரை மட்டும் தான் நாம் சந்திக்க முடியும், சந்திக்க வேண்டும். இது எச்சரிக்கை அல்ல, கட்டளை. 

அதற்குப் பிறகும் முக்கியமான இரண்டு நுழைவாயில்களை கடந்த பிறகு தான் நிர்வாக அலுவலகத்தை அடைய முடிகிறது. இதில் முதல் நுழைவாயிலில்தான் சி.ஐ.எஸ்.எஃப். (CISF) என்றழைக்கப்படும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையினர் கடுமையாகப் பாதுகாக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்