டிரேடர்களே உஷார் - 13

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.அரைமணி நேரத்தில் 500 ரூபாய் லாபம்!

“ஷேர் மார்க்கெட்டில் இன்று சென்செக்ஸ் 450 புள்ளிகள் கூடின. ஷேர் மார்க்கெட்டில், மொத்தப் பங்குகளின் மதிப்பு ரூ.101 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.”

டிவியில் ஓடிய இந்த செய்தியை மனதில் ஓட்டியபடி, டிவியை நிறுத்தினார் ஆதிமூலம். இவர் ஒரு பிளம்பர். ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, ஒரு பிளம்பரிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து, படிப்படியாக தொழிலைக் கற்று இன்று சொந்தமாகவே தொழில் நடத்தி வருகிறார். திருமணம் ஆகி, இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். தினம்  500 சம்பாதித்து, குடும்பத்தை நன்றாகவே கவனித்து வந்தார்.  ஒரு லட்சம் ரூபாயை சேமித்தும் வைத்திருந்தார்.

பத்திரிகையில்  வந்த விளம்பரத்தைப் பார்த்து, எல்லா வேலைகளையும் ஒதுக்கி விட்டு, இலவசமாக நடைபெற்ற பங்குச் சந்தை கருந்தரங்குக்கு போனார். ஏசி குளிருடன் இருந்த அறையில் நுழைவதற்கே ஆதிமூலத்துக்குக் கூச்சமாக இருந்தது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த அறையில் நுழைந்து, ஒரு மூலையில் அமர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன், யாரோ ஒருவர் ஆங்கிலத்தில் பேச, ஆதி மூலத்துக்கு  ஷேர் மார்க்கெட் என்ற வார்த்தையைத் தவிர எதுவும் புரியவில்லை. அடுத்து பேசியவர் தமிழில் பேசினார். பேச்சை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்.

‘‘நீங்கள் விப்ரோ நிறுவனத்தில் 1982-ல் ரூ.10,000 போட்டிருந்தால், அது இப்போது ஏறக்குறைய ரூ.535 கோடிகளாக மாறி இருக்கும். ஆகவே, நீங்களும் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், உங்கள் பணமும் பெரியதாக வளரும்...” என அவர் பேசிய பல விஷயங்கள் புரியாவிட்டாலும், ‘நல்ல கம்பெனியின் பங்கில் பணத்தை போட்டால், அது பல மடங்காக மாறலாம்’ என்கிற விஷயம் மட் டும் ஆதிமூலத்துக்குப் புரிந்தது.

நாமளும் சேர்த்து வைத்திருக்கிற, ஒரு லட்சம் ரூபாயை நல்ல கம்பெனியில போட்டு வைக்கலாம். 5 – 6 வருஷம் கழித்து அது பெரிசா வளரும். பணத்தை போட, நாம யாருகிட்ட போகணும் என யோசனை செய்தபடியே வீட்டுக்குப் போனார்.

பிறகு ஒரு நாள் ஒரு வீட்டுக்கு குழாய் ரிப்பேரை சரி செய்ய போனபோது, அந்த வீட்டு மனிதர் யாருடனோ சத்தமாக பேசுவது கேட்டது. “எஸ் பேங்க் ஷேரே வாங்கிப் போடுங்க சார், அதுதான் இப்ப மளமளவென்று ஏறிகிட்டுருக்கு!’’. 

ஆதிமூலத்துக்கு ஆர்வம் அதிகமானது. இந்த வீட்டு ஓனர்கிட்டே ஷேர் பத்தி கேட்டு பார்த்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். வேலையெல்லாம் முடித்துவிட்டு, கூலி வாங்க வந்த ஆதிமூலத்தை பார்த்து எவ்வளவு கூலி என்று கேட்டு, அதைக் கொடுத்தார் அந்த நபர்.

ஆதிமூலம், தயங்கித் தயங்கி ‘‘சார்... ஷேர் மார்க்கெட்ல பணம் போட்டு நிறைய சம்பாதிக்க எனக்கு ஆசை. எனக்கு நீங்க வழிகாட்டுவீங்களா?” எனக் கேட்டார்.

அந்த மனிதர், பிளம்பர் ஆதிமூலத்தை ஏறயிறங்கப் பார்த்தார். ‘‘ஏம்பா, நீ எவ்வளவு வைச்சிருக்க...?’’ எனக் கேட்க, ‘‘ஒரு லட்சம் சார்” என்றார் ஆதிமூலம். அந்த மனிதருக்கு உடனே நாவில் கொஞ்சம் எச்சில் ஊறியது. அவர் விசிட்டிங் கார்டை கொடுத்தார்.

ஆதிமூலம் விசிட்டிங் கார்டை வாங்கிப் பார்த்தார். அதில் அவர் பெயர் சம்பந்தம் என்று போட்டிருந்தது. சம்பந்தம் ஒரு புரோக்கர் கம்பெனியில டீலராக இருக்கிறார். கடந்த நாலு வருஷமா இந்தத் தொழிலில் இருக்கிறார். அதற்குள் எட்டு புரோக்கர் கம்பெனி மாறி விட்டார். இவருக்குப் பங்குகளை வாங்குறது, விற்கறது என்ற விஷயம் மட்டுமே தெரியும். மார்க்கெட் பற்றி எதுவும் தெரியாது. ஆனா, பேசும்போது எல்லாம் தெரிந்த நபர் போல் பேசுவார். காதில விழுந்த செய்தியை வைத்துக் கொண்டு,  இதை வாங்குங்க, அதை வித்திடுங்க என்று சொல்லி காலத்தை ஓட்டுவார். 

ஒரு புரோக்கர் கம்பெனியில சேர்ந்தவுடன், அவர்கள்  கொடுக்கிற வாடிக்கையாளர் களின் பட்டியலை வைத்து எல்லோரையும் போனில் பேசி, இன்னிக்கு டிரேட் பண்ண வாங்க என்று அழைப்பார்.  எப்படியாவது, சில ஆர்டர்களை போட வைத்து, அவர்கள் பணத்தை காலி பண்ணிவிடுவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்