கடும் நடவடிக்கை எடுத்தால் தவறில்லை!

ஹலோ வாசகர்களே..!

வாராக் கடன் பிரச்னைக்கு ஒரு தீர்வாக, தொழிலதிபர்களின் பெயரில் இருக்கும் சொத்துக்களைப் பிடுங்கி விற்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால், பலரும் தொழில் செய்யவே முன்வராமல் போய்விடுவார்கள் என்று அச்சம் தெரிவித் திருக்கின்றன வங்கிகள். வாராக் கடன் பிரச்னைக்கான தீர்வுகளைக் கண்டடைவதற்காக நிதி அமைச்சகம் அமைத்திருக்கும் கமிட்டி நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட சில வங்கி அதிகாரிகள் இப்படிக் கருத்து சொல்லி இருக்கின்றனர்.

வாங்கிய கடனைத் திரும்பக் கட்டாதபட்சத்தில் கடன் வாங்கியவர் கொடுத்த கேரண்டி பேரில் சொத்துக்களை விற்று வங்கிகள் தனக்கான பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. வாராக் கடனுக்காக கடும் நடவடிக்கை எடுத்தால், பலரும் தொழில் கடன் வாங்க முன்வர மாட்டார்கள் என்பதற்காக கடனைத் திரும்பக் கட்டாதவர்களைக் கருணையோடு அணுக முடியாது.

காரணம், வங்கிகளின் வாராக் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2013 மார்ச்சில் வெறும் 3.4 சதவிகிதமாக இருந்த மொத்த வாராக் கடன் 2016 மார்ச்சில் 7.6 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இது 2017 மார்ச்சில் 8.5 சதவிகிதமாக உயர்ந்துவிடும் என்கிறார்கள். ஆக, எந்த மந்திரத்துக்கும் கட்டுப்படாத பேயைப் போல வளர்ந்து வரும் வாராக் கடனை ஒழிக்க இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமே ஒழிய, தயவு தாட்சண்யத்தோடு அணுகுவது வங்கியில் டெபாசிட் செய்த சாதாரண மக்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்