டிரேடிங்கில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு வரிச் சலுகை பெறுவது எப்படி?

?பங்கு வர்த்தகத்தில் எனக்கு ரூ. 93,000 நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நஷ்டம் டே டிரேடிங் மூலமாக ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை எப்படிக் கணக்கில் காட்டி வரிச் சலுகை பெறலாம்?

குருமூர்த்தி.

என்.பி.இசை அழகன், ஆடிட்டர், இசை அண்ட் கோ.

“தினசரி வர்த்தகம் (டே டிரேடிங்) அல்லது  ஊக வணிகம் மூலம் ஏற்பட்ட  நஷ்டத்தை உரிய தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து மேலும் நான்கு ஆண்டுகளுக்கு  எடுத்துச் சென்று, எதிர்கால லாபத்தோடு சரி  செய்து வரி சேமிக்கலாம். தவணை தேதி கடந்து வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்கள் இச்சலுகையை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊக வணிகத்தில் விளைந்த  நஷ்டமானது, ஊக வணிகத்தின் விளைவாகக் கிடைத்த லாபத்துடன் மட்டுமே சரி செய்ய முடியும். உதாரண மாக, இந்த வருடம் உங்களுக்குக் கிடைத்த நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.1,00,000. ஊக வணிகத்தில் உங்களுக்கு ரூ.93,000 நஷ்டம் ஏற்பட்டிருப்பின், இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று சரிசெய்ய முடியாது. நீண்ட கால மூலதன ஆதாயத்தின் மீது 20% வரி கட்டித்தான் ஆகவேண்டும். ஆக, ஊக வணிகத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை மற்ற லாபத்துடன் ஈடு செய்ய இயலாது.”

?  எனது ஒரு வயது மகளுக்கு உகந்த சிறந்த லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி அல்லது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை பரிந்துரை செய்யுங்கள்.

ஜான் பால்.

ஸ்ரீதரன், தலைமை நிதி ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.

“ஒரு வயது குழந்தைக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி தேவை இல்லை. வருமானம் ஈட்டும் நபருக்கே ஆயுள் காப்பீடு பாலிசி தேவையாகும். ஆகவே, நீங்கள் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில், உங்களது  மகளின் பெயரில் முதலீடு செய்யலாம். இது உங்களது மகளின் 21 வயது முடியும் தருவாயில் முதிர்வடையும். வருடத்துக்கு  குறைந்தபட்சமாக ரூ. 1,000 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை சேமிக்கலாம். மேலும், உங்களது  மகளின் மேற்படிப்புக்காக சேமித்த தொகையிலிருந்து 50% வரை திரும்பப் பெற முடியும். மேலும், இதன் இன்றைய வட்டி விகிதம் 8.6 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்