விஷன் 2030 முதலீட்டுக்கு ஏற்ற ரைசிங் செக்டார்கள்!

வி.கோபாலகிருஷ்ணன், நிறுவனர், மணி அவென்யூஸ் (Money Avenues).

முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய பல முதலீட்டு வழிகள் இருந்தாலும், தங்களது முதலீடுகளுக்குக் கூடுதல் வருமானத்தையும் பணவீக்கத்தை ஈடுகட்டும் விதமாக நீண்ட       காலத்தில் முதலீட்டுக்கு நல்ல வளர்ச்சியையும் தரவல்லது பங்குச் சந்தைதான் என்பதைக் கடந்த கால     வரலாறு  மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

ஆண்டு 2030 என்பதை ஓர் இலக்காக வைத்துக் கொண்டு ஒரு முதலீட்டாளர் இப்போதிருந்தே பங்குகளில் முதலீடு செய்து அதிக லாபம் பெறவேண்டும் என்று திட்டமிட்டால் எது மாதிரியான பங்குகளை அவர் வாங்க வேண்டும், எந்தத் துறைகளைச் சேர்ந்த பங்குகளை வாங்கவேண்டும், அப்படி அந்தப் பங்குகளை வாங்கினால் அவரின் நிதி இலக்கை அவர் எப்படி அடைய முடியும் என்பதைப் பார்க்குமுன், இந்தியாவின் பங்குச் சந்தைகள் கடந்த காலங்களில் எது மாதிரியான வளர்ச்சியை முதலீட்டாளர்களுக்கு வழங்கி இருக்கிறது என்பதைப் பார்த்தால் ஒரு தெளிவான புரிதல் கிடைக்கும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தாலும், 1990-களில் எடுக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி)  ஒரு கட்டத்தில் 8 - 9% என்ற அசுர வளர்ச்சியை எட்டியது.

இதற்கு முக்கியக் காரணம், நமது நாட்டில் வேகமாக வளர்ந்து வந்த தொழில் வளர்ச்சிதான். தொழில் முதலீடுகள் அதிகரித்ததாலும், அதன் காரணமாக நிறுவனங்களின் வியாபார வளர்ச்சி அதிகரித்ததாலும், இந்தியாவின் தொழில் வளர்ச்சி அதிவேகமாக முன்னேறி வந்தது.

அந்த வகையில் தொலைத் தொடர்பு, வங்கி மற்றும் நிதிச் சேவை, நுகர்வோர், பார்மா, தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம் போன்ற முக்கியத் துறைகள் கடந்த பதினைந்து வருடங்களில் அபார வளர்ச்சி பெற்றன. அதன் காரணமாக அந்தத் துறை பங்குகள் முதலீட்டாளர்களுக்கு பெருத்த லாபத்தைக் கடந்த காலங்களில் கொடுத்தன. மேலும், தொழில் வளர்ச்சி காரணமாக அதிக வேலைவாய்ப்புகள் உருவாகி அதுவே இந்தியாவை ஒரு மிகப் பெரிய நுகர்வோர் சந்தையாக மாற்றியது. அதை பயன்படுத்திக் கொள்ள பல வெளிநாட்டு நிறுவனங்களும் ஆர்வத்துடன் இந்தியாவில் தொழில் தொடங்கியது. இது போன்ற காரணங்களுக்காகப் பங்குச் சந்தையும் நல்ல ஒரு ஏற்றத்தை சந்தித்து வந்தது.

அந்த காலகட்டத்தில் அந்நிய முதலீட்டாளர்களும் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினார்கள். அதன் காரணமாகவும் இந்தியப் பங்குச் சந்தை நல்ல ஒரு வளர்ச்சியை கடந்த 15 ஆண்டுகளில் சந்தித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்