நாணயம் லைப்ரரி: சிகரம் தொட வைக்கும் 7 ‘சி’-க்கள்!

புத்தகத்தின் பெயர்    :    த ஆர்ட் ஆஃப் அச்சிவ்மென்ட் (The Art of Achievement)

ஆசிரியர்    :  
  டாம் மாரிஸ் (Tom Morris)

பதிப்பாளர்    :    Andrews McMeel Publishing

வாழ்க்கையிலும் தொழிலிலும் நீங்கள் பெரிய  வெற்றியைத் தொட வேண்டுமா?  டாம் மாரிஸ் எழுதிய  ‘த ஆர்ட் ஆஃப் அச்சிவ்மென்ட்’ எனும் புத்தகத்தைப் படியுங்கள். ஏழு முக்கிய விஷயங்களைச் சொல்கிறார் டாம் மாரிஸ்.

தனக்கு என்ன தெரியாது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளாத ஒருவனுடைய அறிவு அவனை தவறான பாதையிலேயே நிச்சயம் கொண்டு செல்லும் என்ற வாசகத்துடன் அதிரடியாய் ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

ஆதிகாலத்தில் இருந்தே உலகின் எல்லாப் பாகங்களிலும், எல்லா கலாசாரத்திலும் இருந்த வெற்றி குறித்து சிந்தனையாளர் களும், வெற்றி பெற்றவர்களும் தங்களுடைய சிந்தனைகளையும் அனுபவத்தையும் சிறு சிறு துளிகளாக நமக்கு விட்டுச் சென்றுள்ளனர்.  அவற்றினை தொகுத்து வெற்றிக்கான ஏழு ‘சி’-க்கள் (கன்செப்ஷன், கான் ஃபிடென்ஸ், கான்சென்ட் ரேஷன், கன்சிஸ்டன்சி, கமிட்மென்ட், கேரக்டர், கெப்பாசிட்டி டு என்ஜாய் என்ற ஏழு பிரிவாய்) தந்துள்ளார்.

வெற்றி பெறுவதற்கு குறிப்பிட்ட சட்ட திட்டங்களோ, மேஜிக் பார்முலாக்களோ இல்லை. உதாரணத்துக்கு, புத்தகப் பதிப்பாளர்களால் எந்த புத்தகம் விற்பனையில் ஹிட் அடிக்கும் என்பதை கண்டறிய முடிவதில்லை. விளையாட்டு பொம்மைகள் மற்றும் கேமிங் சாஃப்ட்வேர்கள் எழுதுபவர்களால் அடுத்து எந்த விளையாட்டு மக்களிடையே ஆர்வம் பெறும் என்பதைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. ரொம்பவும் சிந்தித்து ஆராய்ந்தறிந்து ஆரம்பிக்கப் படும் தொழில்களிலே கூட சில வெற்றியையும் சில தோல்வியையும் தழுவுகின்றன.

இன்றைக்கு  உங்களைப் பார்த்து சிரிக்கும் அதிர்ஷ்ட தேவதை நாளைக்கே உங்கள் காலை வாரி விட்டுவிட்டு போய் விடலாம் இல்லையா? அதனால் தானே இன்றைக்கு வேண்டும் என்றால் நான் இப்படி இருக்கலாம்; அந்தக் காலத்திலே நானெல்லாம் எப்படி இருந்தேன் தெரியுமா என்ற பழம் பெருமை யையும், வெற்றி பெறுவதற்கு முன்னால நான் பட்ட கஷ்டத்தை எல்லாம் சொல்லி மாளாது என்ற பேச்சுக்களையும் இன்றைக்கும் நாம் கேட்கிறோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்