கேட்ஜெட்ஸ்

கார்த்தி

லீ ஈகோ லீ மேக்ஸ் 2 (LeEco Le Max2)

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் லீ 1 எஸ் என்ற பெயரில் மொபைல்களை சந்தையில் களமிறக்கியது லீ ஈகோ நிறுவனம்.முதல் காலாண்டிலேயே  மொபைல் விற்பனையில் டாப் 5 இடங்களைப் பிடித்தது. ஆறு மாதத்துக்குள், அந்த மொபைல்களின் அடுத்த வெர்ஷனை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

5.7” இன்ச் டிஸ்ப்ளே, 4 ஜிபி ரேம், 32ஜிபி இன்டெர்னல் மெமரி, கோல்கம் ஸ்னேப்டிராகன் 820 64-bit 2.15 GHz பிராசஸர், மெட்டல் பாடி, டூயல் சிம்  2560x1440 பிக்ஸல் என ஸ்பெஸி ஃபிகேசனில் அசத்தியிருக்கிறார்கள். 

ரியர் கேமரா 21 மெகா பிக்ஸலிலும், ஃபிரன்ட் கேமரா 8 மெகா பிக்ஸலிலும் இருக்கும் வண்ணம் வடிவமைத்து இருக்கிறார்கள். ரியர் கேமரா டூயல் LED ஃபிளாஷுடன் வருகிறது. மொபைலில் வரும் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் ரியர் கேமராவுக்குக் கீழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. லீ ஈகோ மொபைல்களுக்கே உரித்தான டைப்-சி கனெக்ட்டரைத் தான் இந்த மொபைலும் பயன்படுத்துகிறது.

ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ மென்பொருளில் இந்த மொபைல் இயங்குகிறது. இதில் இருக்கும் 4 ஜிபி ரேம் மூலம் பல அப்ளிகேஷன்களை எளிதாகப் பயன்படுத்த முடிகிறது. இதில் இருக்கும் அதிவிரைவு சார்ஜ் தொழில்நுட்பத்தின் மூலம் விரைவாக இதன் 3100mAh  பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.

தற்போது வெளிவரும் எல்லா மொபைல்களிலும் இருக்கும் 3.5mm ஆடியோ ஜேக்குக்கு பதில் டைப் சி கனெக்டரிலேயே பாடல் கேட்கும் வண்ணம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மொபைலுடன், CDLA ஹெட் செட்டையும் இலவசமாக தந்திருக்கிறது.

4 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் என இரு மாடல்களை வெளியிட்டு இருக்கிறது லீ ஈகோ நிறுவனம்.

பிளஸ்

டிசைன்
கேமரா
பேட்டரி திறன்
நல்ல செயல் திறன்

மைனஸ்

எடை
FM இல்லை
மெமரி கார்டு வசதி இல்லை

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்