பிபிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுக்கலாம்!

அரசு அதிரடி அறிவிப்புசோ.கார்த்திகேயன்

பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லப்படும் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்திருப்பவர்கள் தங்களுடைய பணத்தை 15 ஆண்டு நிறைவடைவதற்குமுன் எடுக்க முடியாது என்ற விதி உள்ளது. இப்போது பொது மக்களின் வசதிக்காக அவசரத் தேவையின்போது பணத்தை எடுக்க அரசு வசதி செய்துள்ளது.

பிபிஎஃப் முதலீடு என்பது வருமான வரியை சேமிக்கக்கூடிய ஒரு முதலீட்டுக் கருவி என்பது நாம் அறிந்ததே. வருமான வரிச்் சட்டம் 80சி பிரிவின் கீழ், நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரி விலக்கு உண்டு. பிபிஎஃப் கணக்கைத் துவங்கிய 3-வது முதல் 6-வது ஆண்டுக்குள் கடன் பெறும் வசதி உள்ளது.

இந்த நிலையில் பிபிஎஃப் கணக்குத் தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், பிள்ளைகளின் உயர் கல்வி மற்றும் அவசர மருத்துவச் செலவு போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பிபிஎஃப் கணக்கை முன்கூட்டியே முழுமையாக முடித்து பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஆனால், பிபிஎஃப் கணக்கை முடித்து பணத்தைத் திருப்பி எடுப்பதற்கான காரணங்களை உறுதி செய்யும் விதமாக சரியான ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. அதன்படி, மருத்துவக் காரணங்கள் என்றால் அதற்கான ஆவணங்களை மருத்துவரிடமிருந்து வாங்கி சமர்பிக்க வேண்டும். 

உயர் கல்விக்காக பிபிஎஃப் கணக்கை முடித்து பணத்தைத் திரும்பப் பெறும்பட்சத்தில் உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று  அரசு தெரிவித்துள்ளது. இந்தியா அல்லது வெளிநாடுகளில் உயர் கல்வி தேவைக்காக பிபிஎஃப் கணக்கை முடிக்கும் பட்சத்தில், அந்தக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்ததற்கான ஆவணம், கல்விக் கட்டண விவரங்களை சமர்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கணக்குத் தொடங்கி ஐந்து நிதி ஆண்டுகளுக்குப் பிறகுதான் தொகையைத் திரும்பப் பெறும் வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதே சமயம், பிபிஎஃப் பணத்தை முதிர்வுக் காலத்துக்குமுன் திரும்ப பெற வேண்டும் எனில் 1% வட்டி குறைவாக கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு காலாண்டிலும் பிபிஎஃப் உள்ளிட்ட சிறு சேமிப்புகளுக்கான வட்டியை மத்திய அரசு நிர்ணயம் செய்து வருகிறது. இதன்படி பிபிஎஃப் முதலீட்டுக்கு 8.7 சதவிகிதமாக இருந்த வட்டி அண்மையில் 8.1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்