சிறுதொழில் கடன்: எஸ்எம்இ-களுக்குக் கிடைப்பதில் என்ன சிக்கல்?

ஜெ.சரவணன்

ம் நாட்டில் பெரும்பாலானோருக்கு தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. அரசும் சுய தொழில்களை ஊக்குவித்து வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கவே விரும்புகிறது. ஆனால், தொழில் தொடங்கவும், அதை வெற்றிகரமாக வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதற்கான சூழலும் எல்லோருக்கும் எளிதில் வாய்ப்பதில்லை.

தொழிலுக்கு முதலீடு தேவைப் படுகிறது. அது இல்லாதபட்சத்தில் கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் கொடுக்கின்றன. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கொடுக்கும் கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் சிறு தொழில்முனைவோர்கள் தொழில் கடனுக்கு வங்கிகளையே நம்பி இருக்கிறார்கள். ஆனால் வங்கிகளோ சிறு தொழில் முனைவோர்களுக்கு அவ்வளவு எளிதில் கடன் வழங்குவதில்லை.

வங்கிகள் ஏன்  எஸ்எம்இகளுக்கு கடன் வழங்கத் தயங்குகின்றன என்கிற கேள்விக்கு விரிவாக பதில் அளித்துப் பேசினார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் பவன் குமார் பஜாஜ். சென்னையில் ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சமீபத்தில் நடத்திய கருத்தரங்கில் அவர் இது குறித்து பேசினார்.

பெரிய கார்ப்பரேட்டுகள்தான் காரணம்!

“ஒரு வங்கிக்குக் கடன் கொடுப்பதன் மூலம்தான் அதிக வருவாய் கிடைக்கிறது. சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயைக் காட்டிலும் கடன் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய்தான் வங்கிக்கு அதிகம். அப்படியிருக்க வங்கிகள் கடன் வழங்க ஏன் தயங்க வேண்டும்? இதற்கு முதற்காரணம் இங்குள்ள பெரிய நிறுவனங்கள் வாங்கியக் கடனை சரியாகத் திருப்பிச் செலுத்தாததுதான். இதனால் வாராக் கடன் சுமை அதிகரித்து, வங்கிகளுக்குக் கடன் வழங்கப் பணம் இல்லாத நிலை உண்டாகிறது.

இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் தங்களுக்குள் நிலவும் போட்டியில் ஜெயிக்கவும், சந்தையைப் பிடிக்கவும், தங்களின் மதிப்பைச் செயற்கையாக உயர்த்தவும் வங்கிகளிடமிருந்து கடன்களை வாங்கிக் கண்ணை மூடிக்கொண்டு முதலீடு செய்து விடுகின்றன. இதனால் கடந்த சில வருடங்களாகவே ஸ்டீல், உட்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் பவர் என அனைத்துத் துறைகளும் மந்த நிலையைச் சந்தித்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்