கம்பெனி ஸ்கேன்: ஃபியம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

(NSE SYMBOL: FIEMIND)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்த வாரம் நாம் ஸ்கேனிங் செய்ய எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் ‘ஃபியம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’  என்னும் நிறுவனம் ஆகும். 1989-ம் ஆண்டு ராகுல் ஆட்டோ பிரைவேட் லிமிடெட்  என்ற பெயரில் நிறுவப்பட்டது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தை நிறுவியவர் 1970-களில் இருந்தே ஆட்டோமொபைல்களுக்கான விளக்குகள் (முகப்பு விளக்குகள், இண்டிகேட்டர்கள், கேபினுக்குள் இருக்கும் விளக்குகள் போன்றவை) தயாரிக்கும் துறையில் ஈடுபட்டு வருபவராவார்.

இன்றைக்கு ஆட்டோ மொபைல் துறைக்கான விளக்குகள் தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் ஒரு நிறுவனமாகத் திகழ்கிறது ஃபியம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். 

இந்த நிறுவனம் செய்யும் மொத்த வியாபார அளவில் இரு சக்கர வாகனங்களுக்கான விளக்குகள் பெரும்பங்கு வகிக்கின்றன. வாகனத்தின் முன்னால் உள்ள முகப்பு விளக்குகள், பின்னால் உள்ள டெயில் விளக்குகள், இடது/வலது பக்கம் திரும்பும்போது பின்னால் வருபவர்களுக்கு உணர்த்துவதற்காக எரியவிடப்படும் இண்டிகேட்டர் விளக்குகள், கார்களின் உள்ளே கூரையில் இருக்கும் கேபின் விளக்குகள், பின்னால் வரும் வாகனங்களை பார்ப்பதற்கு உதவும் ரியர் வியூ மிரர்கள், சக்கரங்களில் அலங்காரத்துக்காக பொருத்தப்படும் வீல் கவர்கள், பழுதாகி சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படும்போது சாலையில் வரும் வாகனங்களுக்கு நிற்பது தெரிவதற்காக வைக்கப்படும் ரிஃப்ளெக்டிவ் எச்சரிக்கை முக்கோணங்கள், வாகனங்களுக்கான முழுமையான பின்புற ஃபென்டர் அசெம்பிளிகள், ப்ரேம் அசெம்பிளிகள், மட்கார்டுகள் மற்றும் வாகனங்களுக்கான ஷீட் மெட்டல் உதிரிபாகங்கள் போன்றவற்றை இன்றைக்கு தயாரித்து அளித்து வருகின்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்