பிரெக்ஸிட்... இந்தியாவை எப்படியெல்லாம் பாதிக்கும்?

ஜெ.சரவணன்

ங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்த கிரேட் பிரிட்டன், உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உருவாகி உள்ள அமெரிக்காவையும், வளர்ந்து வரும் இந்தியா உட்பட 52 நாடுகளை ஆண்டது வரலாறு. கடந்த 43 ஆண்டுகளாக ஐரோப்பிய யூனியனிலிருந்த பிரிட்டன் தற்போது அதிலிருந்து வெற்றிகரமாகப் பிரிய அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த முடிவு உலக நாடுகள் அனைத்திலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து, ஜெர்மனி உட்பட பெரும்பாலான ஐரோப்பிய கண்ட நாடுகள் சின்னாபின்ன மாகின. அதிலிருந்து மீண்டுவர வேண்டிய கட்டாயத்தில்தான் ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு கூட்டமைப்பு 1951-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிறகு 1957-ல்  பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், லக்ஸம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து ஐரோப்பிய பொருளாதார சமூகத்தை உருவாக்கின. இந்தக் கூட்டமைப்பில் 1973-ல் பிரிட்டனும் சேர்ந்தது. 1993-ல் ஐரோப்பிய யூனியனாக அதிகாரபூர்வமாக மாறியபோது அதில் 28 நாடுகள் உறுப்பினர் களாக இருந்தன.

அந்த நாடுகள் தங்களுக்குள் வர்த்தகம், தொழில் கொள்கைகளை வகுத்துக் கொண்டு தங்கள் பொருளா தாரத்தை உயர்த்த திட்டமிட்டன. யூரோ என்ற பொது கரன்சியை, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பயன்படுத்தி வந்தன, ஒரே ஒரு நாட்டைத் தவிர. பிரிட்டன் தனது பவுண்ட் ஸ்டெர்லிங்கையே  நாணயமாகத் தொடர்ந்தது. ஐரோப்பிய யூனியனில் உள்ள உறுப்பு நாடுகளின் மக்கள், அந்த நாடுகளுக்குள் விசா இன்றி பயணம் செய்யவும், எந்த நாட்டிலும் தங்கி பணியாற்றவும் முடியும். இதனால் தடையற்ற வர்த்தகம் சாத்தியமானது. பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள நாடுகள் நலிந்த நாடுகளுக்கு ஆதரவாய் இருந்தன. அவ்வப்போது ஒப்பந்தங்களின் மூலம் தங்களது பிரச்னைகளைக் கூடி சரிசெய்துகொண்டன இந்த யூனியனில் இருந்த நாடுகள்.

பிரிட்டன் மட்டும் ஏன் வெளியேறுகிறது?

ஐரோப்பிய யூனியனில் வலிமையான நாடுகள் என்று பார்த்தால் பிரிட்டன், ஜெர்மனி, லக்ஸம்பர்க், பிரான்ஸ் ஆகியவை தான். மற்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளோ, வேலை வாய்ப்புகளோ அதிகம் இல்லை. ஐரோப்பிய யூனியன் தனது அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் சேர்த்துதான் பட்ஜெட்டை உருவாக்கும். இதனால் நலிவடைந்த நாடுகளின் சுமையை வலிமையான நாடுகள் ஏற்க வேண்டிய நிலை இருந்தது.

ஆனால், இது மட்டும் வெளியேறுவதற்கான காரணம் இல்லை. தற்போது ஐரோப்பிய யூனியனில் ஒரு பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் நாம் அறிந்ததே. நிலைமை அப்படி இருக்கும்பட்சத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளிலிருந்து மக்கள் பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தார்கள். 1993-2014 காலகட்டத்தில் மட்டும் வெளிநாடுகளில் பிறந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தவர் களின் எண்ணிக்கை 8.3 மில்லியனாக இருந்தது.

பிரெக்ஸிட் முடிவுகள்!

இந்த நிலையில் ஜூன் 23-ம் தேதி நடந்த வாக்கெடுப்பில், 51.8 சதவிகிதத்தினர் பிரிட்டன் வெளியேற்றத்துக்கு ஆதரவாக வும், 48.2 சதவிகிதத்தினர் பிரிட்டன் வெளியேற்றத்துக்கு மறுப்பு தெரிவித்தும் வாக்களித்தனர். பெரும்பான்மை அடிப்படையில் பிரிட்டன் வெளியேறுவது உறுதியானது.
ஆனால், பிரிட்டனின் பகுதிகள் வாரியாகப் பார்க்கையில் வாக்கெடுப்பில் முரண்பாடுகள் இருந்தன. இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக வாக்குகள் காணப்பட்ட நிலையில், ஸ்காட்லாந்து, அயர்லாந்து பகுதிகளில் ஐரோப்பியக் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க அதிகளவில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தலைநகர் லண்டனில் 60% பேர் கூட்டமைப்பில் பிரிட்டன் நீடிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், மொத்தமுள்ள 12 மாகாணங்களில் 9 மாகாணங்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேற வாக்களித்தன. இந்த முரண்பாடான முடிவுகள் பிரிட்டனின் அரசியலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இனிவரும் நாட்களில்தான் தெரியும். தற்போது பிரதமராக உள்ள டேவிட் கேமரூன் தனது ராஜினா மாவை அறிவித்திருக்கிறார். ஸ்காட்லாந்தும் அயர்லாந்தும் இங்கிலாந்திலிருந்து பிரிந்துவிடவும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து முறைப்படி பிரிந்து தனக்கான பொருளாதார மற்றும் வர்த்தக கொள்கைகளை வகுத்து செயல்பட குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகலாம்.

இப்படி பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியனின் எதிர்காலமும் ஒரு நிலையற்ற தன்மையில் இருக்கும் சூழலில், உலக நாடுகளின் பொருளாதாரத் தில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும், இந்தியாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்கிற கேள்விகளை பங்குச் சந்தை மற்றும் முதலீட்டு நிபுணரும், இன்வெஸ்டார்ஸ் ஆர் இடியட்ஸ்.காம் மற்றும் ஐஎன்ஆர் பாண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிறுவனர் அர்ஜுன் பார்த்தசாரதியிடம் கேட்டோம்.

“பிரெக்ஸிட் உலக அளவில் ஒரு முக்கியமான நிகழ்வு என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் அதன் வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான ஜூன் 24-ம் தேதி அன்று ஆசிய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் கடும் இறக்கத்தைச் சந்தித்தன. பிரிட்டன் வெளியேறாது என்று அனைவரும் நம்பிக் கொண்டிருந்ததால், அது எதிர்பாராத முடிவாக இருக்கவே சந்தைகள் இத்தகைய இறக்கத்தைச் சந்தித்தன.

பிரிட்டனின் நாணயமான பவுண்ட்டின் மதிப்பு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவில் 11 சதவிகிதச் சரிவைச் சந்தித்தது. லண்டன் பங்குச்சந்தை 8%  சரிவு கண்டது. பர்க்லேஸ் வங்கி, ராயல் ஸ்காட்லாந்து வங்கியின் பங்கு மதிப்புகளும் 30% வீழ்ச்சி அடைந்தன. யூரோவுக்கு நிகரான பவுண்ட்டின் மதிப்பும் 3.3% வீழச்சி அடைந்தது. பிரிட்டன் அரசுப் பத்திரங்களின் மதிப்பும் சரிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்