பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

இண்டெக்ஸ் :

ஒரு வார காலத்தில் இந்தியப் பங்குச் சந்தையில் என்ன ஒரு மாற்றம்! முந்தைய வாரம் வெள்ளிக்கிழமை ஐரோப்பிய   யூனியனி்லிருந்து இங்கிலாந்து வெளியேறும் முடிவு (Brexit) எடுக்கப்பட்டதால், சந்தை அதிக வீழ்ச்சியை சந்தித்தது.  இந்திய நிறுவனங்களின் வளர்ச்சி மேம்படும், சாதகமான பருவ மழை உள்ளிட்ட காரணங்களால் இந்த வாரம் வெள்ளிக்கிழமை சந்தை ஏற்றத்தில் இருக்கிறது.

இந்தியப் பங்குச் சந்தை மட்டும் அல்ல, சர்வதேச பங்குச் சந்தைகளும் மீண்டும் ஏற்றப் பாதைக்கு வந்திருக்கின்றன. பல பங்குச் சந்தைகள்,  பிரெக்ஸிட்க்கு முந்தைய அதிகத்தை விட உயர்ந்திருக்கின்றன. அதாவது, பிரெக்ஸிட்  என்கிற ஒரு சம்பவம் நடந்ததற்கான அறிகுறியே சந்தையில் இல்லை.

கடந்த வாரத்தில் சந்தை ஏற்றத்தில் தொடங்கியது, அது வாரம் முழுக்க தொடங்கியது. பல நாட்கள் தொடர்ந்து புதிய ஏற்றத்தை கண்டு வந்தன.

நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி இரண்டும் மீண்டும் அதிகரித்துள்ளன. நான்கு மாதங்களாக சந்தை ஏற்றத்தில் உள்ளதால், தற்போது சந்தையில் ஓவர் பாட் என்கிற அதிகமாக வாங்கப்பட்டுள்ள நிலை உருவாக வாய்ப்புள்ளது. இதனால் ஐரோப்பா விலிருந்து இங்கிலாந்து வெளியேறியது  பிரச்னை இல்லை என ஒரு முடிவுக்கு வந்துவிட்டோமா என வியக்க வைக்கிறது.

கடந்த வாரம் தொடர்ந்து சந்தை ஏற்றம் கண்டதால், கடந்த இரு குளோசிங் நிலையை ஸ்டாப் லாஸ் ஆக நிர்ணயித்துக் கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடலாம்.  நிஃப்டி மற்றும் நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்க்கு ஸ்டாப்லாஸ் 8230/17770-ஆக வைத்துக் கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடலாம். இந்த நிலையில், விலையில் புதிய ஸ்விங் உச்சத்தில் முடிந்திருப்பதால், ஏற்கெனவே உள்ள லாங்க் பொசிஷன்களை தொடரலாம். இலக்காக 8490/18500 ஆக வைத்துக் கொள்ளலாம்.

யூஎஃப்ஒமூவிஸ் இந்தியா (UFO)

வாங்கவும்

தற்போதைய விலை: ரூ. 570.35

சில வாரங்களுக்குமுன் பங்கின் விலையில் கவர்ச்சிகரமான பேட்டர்ன் உருவாகி இருந்தது. இதனை அடுத்து பங்கின் விலை அதன் ரேஞ்ச் பவுன்ட் நிலையான ரூ.515-525 உடைக்கப்பட்டு ஏற்றம் கண்டு வருகிறது. பங்கின் விலை இப்போதுதான் ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது. இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய நிலையில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். இலக்கு விலை ரூ.605. ஸ்டாப் லாஸ் ரூ.525-க்கு கீழே வைத்துக் கொள்ளவும்.

டாடா காபி (TATACOFFEE)

வாங்கவும்

தற்போதைய விலை : ரூ. 114.25


இந்தப் பங்கும் அதன் சமீபத்திய தேக்கநிலையை உடைத்து பிரேக் அவுட் ஆகி இருக்கிறது. காபிக்கு இப்போது நல்ல டிமாண்ட் இருக்கிறது. அந்த வகையில் இந்த நிறுவனப் பங்கின் விலை அதிகரிக்க கூடும். தற்போதைய நிலையில், இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். இலக்கு விலை ரூ.130. ஸ்டாப் லாஸ் ரூ.99 வைத்துக் கொள்ளவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்