நிஃப்டி எதிர்பார்ப்புகள்: பிராஃபிட் புக்கிங் எந்த நேரத்திலும் வரலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்பிராஃபிட் புக்கிங் எந்த நேரத்திலும் வரலாம்!

ஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி வாரம் என்பதால் அதற்கான வாலட்டைலிட்டி வரும்  வாரத்தில் இருக்கும். 8100 லெவல்களுக்கு கீழே இருக்கும் வரை மீண்டும் 7740 வரையிலுமான வேகமான இறக்கம் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம் ; 8280 லெவலைத் தாண்டி வால்யூமுடன் இரண்டுக்கும் மேற்பட்ட குளோஸிங்குகள் வராத வரை இறக்கம் முடிவடைந்துவிட்டது என்று சொல்ல முடியாத நிலையே தொடரும்;  இனி வரும் செய்திகள் சந்தையை நன்றாகவே பாதிக்கும் வாய்ப்பிருப்பதால் செய்திகளின் மீது தொடர்ந்து கவனம் வைத்தே வியாபாரம் செய்யவேண்டி இருக்கும் என்றும் சொல்லி இருந்தோம்.

8039 என்ற லெவலை குறைந்த பட்சமாகவும், 8356 என்ற லெவலை அதிகபட்சமாகவும் கொண்டு வியாபாரமாகிய நிஃப்டி வாரத்தின் அனைத்து நாட்களிலுமே ஏற்றத்துடன் முடிவடைந்து வார இறுதியில் வாராந்திர ரீதியாக 239 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

நான்கு டிரேடிங் தினங்களை மட்டுமே கொண்ட மற்றும் இந்திய அளவிலான பெரிய பொருளாதார டேட்டா வெளியீடுகள் எதுவும் இல்லாத வாரத்தினை எதிர்கொள்ளப் போகிறோம். செய்திகள் மட்டுமே சந்தையை எடுத்துச்செல்லும். எனவே, செய்திகள் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிப்ப தாய் இருக்கும். ஒரு சிறிய பிராஃபிட் புக்கிங் எந்த நேரத்தி லும் வரலாம் என்பதை எதிர் பார்த்தே சந்தையில் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும்.

செய்திகள் நெகட்டிவ்வாக இல்லாதபட்சத்தில் சந்தையில் ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பே இருக்கிறது என்கிற சூழ்நிலையே டெக்னிக்கல்கள் காட்டுகிறது.  அப்படி தொடர் ஏற்றம் வரும்பட்சத்தில் 8520 லெவல்கள் வரை சென்ற பின்னரே ஒரு சிறிய கரெக்‌ஷனுக்கு வாய்ப்பு உள்ள சூழல் நிலவுகிறது.

வால்யூமின் மீது கவனம் வைக்கவேண்டிய தருணம் இது. வால்யூம் குறைவாக நடக்க ஆரம்பித்தால் ஓவர்நைட் பொசிஷன்களை முழுமையாக தவிர்ப்பது நல்லது. வீக்னெஸ் கண்ணில் தெரிந்தாலுமே ஷார்ட் சைட் வியாபாரம் செய்ய முயலாதீர்கள்.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இதையும் கவனத்தில்கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 01-07-16 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்