ஷேர்லக்: பாசிட்டிவ் போக்கில் பங்குச் சந்தை!

நாம் இதழ் முடிக்கும் பணியில் லயித்துப் போய் கிடக்க, சைலன்டாக வந்து திருத்தி வைத்திருந்த ‘7-வது சம்பள கமிஷன்.. பாசிட்டிவ்- நெகட்டிவ்’ பக்கத்தைப் புரட்டினார் ஷேர்லக். அவர் படித்து முடிக்கும் வரை காத்திருந்தோம். படித்து முடித்தவுடன் மென்மையான புன்னகையைத் தவழவிட்டவர், நம் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாரானார். 

‘‘கடந்த ஐந்து வர்த்தக தினங்களிலும் சந்தை ஏற்றம் கண்டிருக்கிறதே?’’ என்றோம் அளவற்ற சந்தோஷத்துடன்.

‘‘ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து வெளியேறியது, ஏழாவது ஊதியக் கமிஷனுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது, பருவ மழை எதிர் பார்ப்பு, நடப்புக் காலாண்டில் நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்கும் என்கிற  கணிப்பு போன்றவற்றால் நம் சந்தை தொடர்ந்து ஏற்றம் காண ஆரம்பித்திருக்கிறது. கடந்த வியாழன்று சுமார் 30 நிறுவனப் பங்குகள் இதுவரைக்கும் இல்லாத புதிய உச்ச விலையைத் தொட்டு இருக்்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இறக்கம் கண்டு வருவதால், ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனம் பிபிசிஎல், ஒட்டுபசை தயாரிப்பு நிறுவனமான பிடிலிட்டி-ன் பங்குகள் புதிய உச்சம் கண்டி ருக்கின்றன. இவை தவிர, கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பெட்ரோ நெட் எல்என்ஜி, பயோகான், டியூப் இன்வெஸ்ட்மென்ட், சிட்டி யூனியன் பேங்க் போன்றவற்றின் பங்கு விலையும் புதிய உச்சத்தை அடைந்திருக்கின்றன’’ என்றவர் சுக்குமல்லி காப்பியை பருகினார்.

‘‘இந்தியாவில் பெரிய பொதுத் துறை வங்கிகளை இணைப்பதால் லாபமில்லை என்று மூடிஸ் சொல்லி இருக்கிறதே?’’ என்றோம்.

‘‘இந்தியாவில் உள்ள பல பொதுத் துறை வங்கிகளில் பணியாளர்கள் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. மேலும், வாராக் கடன் தொடங்கி பலமான நிதிச் சிக்கலிலும் சிக்கி இருக்கின்றன. பல வங்கி தொழிற் சங்கங்கள் பென்ஷன் கேட்டு போராடி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவிலுள்ள 27 பொதுத் துறை வங்கிகளை 10 அல்லது அதற்குக் குறைவான எண்ணிக்கையில் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்திய வங்கித் துறையில் மொத்தம் ரூ.5.9 லட்சம் கோடி வாராக் கடன் உள்ளது. இதில் 90% பொதுத் துறை வங்கிகளை சேர்ந்தவையாகும். முதல் கட்டமாக எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட உள்ளன. இவ்வளவு பிரச்னைகள் இருக்கும் நிலையில், பொதுத் துறை வங்கிகளை இணைப்பது மூலம் கிடைக்கும் லாபங்களை விட ரிஸ்க் அதிகமாக இருக்கும் என சர்வதேசத் தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது’’ என விளக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்