டிரேடர்களே உஷார் - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.டீலர்களை முழுமையாக நம்பினால்!

கிஷோர்குமார் தட்டுத் தடுமாறி 10-ம் வகுப்பு பாஸ் செய்தான். அவனை பிளஸ் 2 வகுப்பில் கட்டாயப்படுத்தி சேர்த்துவிட்டனர் அவன் பெற்றோர். கிஷோருக்கு சுட்டுப்போட்டாலும் படிப்பு வரவில்லை. இரண்டு வருஷத்தை எப்படியோ கஷ்டப்பட்டு ஓட்டினான். எதிர்பார்த்தபடியே அவன் 12-ம் வகுப்பில் தேறவில்லை.

பெற்றோர் அவனை டுடோரியல் காலேஜில் சேர்த்து எப்படியாவது, 12-ம் வகுப்பைத் தாண்ட வைக்கவேண்டும் என்று எல்லா முயற்சியும் எடுத்தனர்.   ஆனால், அவர்களின் முயற்சி எல்லாம் தோல்விதான். கடைசியில் அவனது பெற்றோர், அவனை ஒரு ஜவுளிக் கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டனர்.

ஜவுளிக் கடை வேலை என்பது சற்றே சிரமமான வேலை. சேல்ஸ் கவுன்டரில் நாள் முழுவதும் நிற்க வேண்டும். கிஷோருக்கு பொதுவாகவே கஷ்டப்பட்டு வேலை செய்வதே பிடிக்காது. சூப்பர்வைசர் வரும்போது கஷ்டப்பட்டு வேலை பார்ப்பதுபோல் நடிப்பான். மீதி நேரம் வேலையை மற்றவர்கள் தலையில் கட்டிவிடுவான். கடையில் ஏதாவது தவறு நடந்துவிட்டால், யாராவது ஒருவரை சூப்பர்வைசரிடம் மாட்டிவிடுவான்.

இப்படி பல கம்பெனிகள் மாறிக் கொண்டிருந்தவனுக்கு திடீரென அதிர்ஷ்டம் அடித்தது. அந்த ஜவுளிக்கடைக்கு தொடர்ந்து வரும் ராமர் என்கிற கஸ்டமர், அங்கு சேல்ஸ் கவுன்டரில் இருந்த கிஷோர் மற்றும் மற்றவர்களிடமும், ‘‘தம்பிங்களா... ஒரு புரோக்கர் ஆபிசில் டிரைனியாக வேலைக்கு எடுக்கிறாங்க. யாருக்காவது விருப்பம் இருந்தா சொல்லுங்க, நான் சேர்த்து விடுகிறேன்’’ என்றார்.

கிஷோர் டக்கென்று கையை உயர்த்தினான். ‘‘சார்... சார்... என்னை அந்த புரோக்கர்கிட்ட சேர்த்துவிடுங்க சார்’’.

ராமரும், கிஷோரை அந்த புரோக்கரிடம் சேர்த்துவிட்டார்.

கிஷோர் அந்த புரோக்கர் ஆபிசில், டிரையினாக சேர்ந்தான். சம்பளம் ரூ.2,500. புரோக்கருக்கும் குறைந்த சம்பளத்தில் ஒரு ஆள் கிடைத்தது. கிஷோருக்கும் ஏசி அறையில் உட்கார்ந்த இடத்தில் வேலை கிடைத்ததில் சந்தோஷம். கிஷோருக்கு எப்படி ஆர்டர் போடவேண்டும் என்று கற்றுக் கொடுக்கப்பட்டது. 

F1 - பங்கு வாங்க. F2 - பங்கு விற்க. F3 - ஆர்டர் நிலையை தெரிந்துகொள்ள. F4 - மார்க்கெட் வாட்ச் உருவாக்க. F5 - பெஸ்ட் 5 விலைகளைப் பார்க்க. ஒரு டீலருக்கு இதெல்லாம் தெரிந்தால் போதும். அவர் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் போட தெரிந்த ஆளாகக் கருதப்படுவார். குறைந்த சம்பளத்தில் புரோக்கருக்கு ஒரு ஆள் கிடைத்தார். இப்படியாக கிஷோர் ஒரு ஷேர் மார்க்கெட்டில்   ஆர்டர் போடும் டீலராக மாறினார்.

இதுவரைக்கும் கம்ப்யூட்டரில் வெறுமனே தட்டித் தட்டிக் கொண்டிருந்தவரை, அடுத்த நாள், டிரேடிங் டெர்மினலில் உட்கார வைக்கப்பட்டார். 10 கிளையன்ட் லிஸ்ட்டை கொடுத்தார்கள். ஒவ்வொரு வருக்கும் போன் செய்து, ‘‘சார், நான் நல்லா சர்வீஸ் பண்ணுவேன் சார். ஏதாவது ஆர்டர் இருந்தா போடுங்க சார்’’ என்று கேட்க ஆரம்பித்தார். அதில் ஏற் கெனவே நஷ்டப்பட்ட சந்தானம் என்கிற வாடிக்கையாளர் இவரிடம் மாட்டினார். 

‘‘தம்பி, நான் ஏற்கெனவே நிறைய நஷ்டப்பட்டுடேன். இப்ப கணக்கில இருக்கிற ரூ.10,000-தான் கடைசிப் பணம். நீதான் தம்பி உதவி பண்ணனும்’’ என்று கோரிக்கை வைத்தார் சந்தானம்.

‘‘கவலைப்படாதீங்க சார், நான் எல்லாம் உங்க நல்லதுக்குத்தான் சொல்வேன். இப்ப சன் பார்மா வாங்குங்க, கையில டிப்ஸ் இருக்கு.’’ 

‘‘வேணாம் தம்பி, இன்னிக்கு செவ்வாய்க்கிழமை, நாளையிலிருந்து பார்த்துக்கலாம்’’.

மறுநாள் சந்தானத்துக்கு கிஷோர் போன் பண்ணி, ‘‘சார், நேத்து சன் பார்மா சொன்னேன் இல்லே, இப்ப ஏறிப் போச்சி. அதனால அது வேணாம். இன்னைக்கு டாடா ஸ்டீல் டிப்ஸ் இருக்கு. போடவா? என்று கேட்டார்.

‘‘ஏம்பா, நல்லா ஏறுமா?’’ சந்தேகத்துடன் கேட்டார் சந்தானம்.

‘‘சார் நான் எப்பவும் உங்க நல்லதுக்குத்தான் சார் சொல்லுவேன்’’ என்று ஒரே போடு போட்டார் கிஷோர்.

சந்தானம் முதல் ஆர்டர் கொடுத்தார். ‘‘100 டாடா ஸ்டீல் வாங்குங்க; விலை 375’’ என்றார். கிஷோர் டப் டப் என்று கம்ப்யூட்டரைத் தட்டினார். ‘‘சார், நீங்க டாடா ஸ்டீல் வாங்கியாச்சி’’ என்றான். ஒரு மணி நேரம் கழித்து சந்தானம் போனில் வந்தார்.

‘‘தம்பி, டாடா ஸ்டீல் இப்ப என்ன விலை?’’

கிஷோர் விலையைப் பார்த்தார். ‘‘சார்... இப்ப ரூ.385-ல இருக்கு சார்’’. ‘‘சரி, வித்திடு’’ என்று  சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் சந்தானம்.

அதை விற்பதற்குமுன் சந்தானத்தின் அக்கவுன்ட்டை செக் பண்ணிவிட்டு விற்கலாம் என்று நினைத்து சந்தானத்தின் அக்கவுன்ட்டைப் பார்த்தார். கொஞ்ச நேரத்துக்கு முன்பு, சந்தானம் 100 டாடா ஸ்டீலை 375 என்ற விலைக்கு வாங்குவதற்கு பதிலாக, விற்கப்பட்டு இருந்தது. இப்போது என்ன செய்வது? நான் தப்பு செய்துவிட்டேன் என்று மேனேஜரிடம் சொன்னால், என்னை வேலையை விட்டு நீக்கிவிடுவார்களே என்று பயந்து, அதை சொல்லாமலே விட்டுவிட்டார். அப்புறம் இந்தப் பிரச்னையை எப்படி சரிசெய்வது? நாளைக்கு அந்த வாடிக்கையாளர் நான் வாங்கச் சொன்னேன், நீங்கள் விற்றிருக்கிறீர்களே! என்று கேட்டால், என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தார்.

இந்த சமயம் கிஷோரின் மூளை கிரிமினலாக யோசிக்க ஆரம்பித்தது. சந்தானம் கணக்கில் இப்போது 100 டாடா ஸ்டீல் விற்கப்பட்டு இருக்கிறது. முதலில் அதை வாங்கி நேர் செய்ய வேண்டும் என்று நினைத்த சந்தானம், முதலில் சந்தானத்தின் கணக்கில் 100 டாடா ஸ்டீலை வாங்கி நேர் செய்தார்.  அப்பாடா, பிரச்னை ஓவர் என்று நினைத்தவருக்கு சந்தானம் கணக்கில் ரூ.1000 நஷ்டம் காட்டிக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. இதை எப்படி சரிகட்டுவது என்கிற கேள்வி அவனைக் குடைய ஆரம்பித்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்