சுயநலத்துக்காக பொதுநலனை பலி தராதீர்கள்!

ஹலோ வாசகர்களே..!

த்தனை நாளும் அமைதியாக இருந்த காங்கிரஸ் கட்சியானது இப்போது ஒரு பெரிய வெடிகுண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது. 2007 முதல் 2010 வரையிலான மூன்று ஆண்டு களில் ஆறு டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வருமானத்தைக் குறைத்துக் காட்டியதன் விளைவாக அரசாங்கத்துக்கு சுமார் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு மற்றும் தணிக்கைக் குழு தெரிவித்திருக்கிறது. இந்த இழப்பு இப்போது ரூ.45,000 கோடிக்கும் அதிகமாக உயர்ந்திருப்பதாகவும், இந்த விஷயத்தில் கடினமான நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைக்கிறது பா.ஜ.க. அரசாங்கம் என குற்றம் சாட்டி இருக்கிறது காங்கிரஸ் கட்சி.

ஆறு டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் வருமானத்தைக் குறைத்துக் காட்டியது காங்கிரஸ் ஆட்சியில்தான். இது நடந்தபின் சுமார் மூன்று ஆண்டு காலம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் இது குறித்து தீவிரமான நடவடிக்கை எடுக்காமல், இப்போது பா.ஜ.க. மீது குற்றம் சாட்டுவது கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல் எரிகிற மாதிரி. இந்தப் பிரச்னை பெரிதானால் தனக்குத்தான் அதிக பாதிப்பு என்பதை காங்கிரஸ் மறந்தது ஏன்? தவிர, கணக்கு மற்றும் தணிக்கைக் குழுவின் அறிக்கை கடந்த பிப்ரவரி மாதமே வெளியாகி விட்டது. இத்தனை நாட்களாக இது பற்றி பேசாமல் இப்போது இதைக் கிளப்புவதன் நோக்கம் என்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்