வீட்டுக் கடன் இன்ஷூரன்ஸ் அவசியம் தேவையா?

மு.சா.கௌதமன் ஹோம் லோன் ஸ்பெஷல்!

வீட்டுக் கடன் இன்ஷூரன்ஸ் என்ற உடனேயே “நான்தான் ஏற்கெனவே பாலிசி எடுத்திருக்கி றேனே! இன்னொரு பாலிசி எதற்கு’’ என்றுதான் பலரும் கேட்கிறார்கள். வீட்டுக் கடனுக்கும், தனி நபருக்கும் ஏன் தனித்தனியாக லைஃப் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும், குறைந்த பிரீமியத்தில் என்னென்ன லைஃப் இன்ஷூ ரன்ஸ் பாலிசிகள் இருக்கின்றன என்பதைப் பற்றி ஃபண்ட்ஸ் இந்தியா டாட் காம் நிறுவனத்தின் இன்ஷூரன்ஸ் நிபுணர் எஸ்.ஸ்ரீதரனிடம் கேட்டோம். விளக்கமாகச் சொன்னார் அவர்.

ஏன் தனித்தனி பாலிசி?

‘‘ ஏற்கெனவே எடுத்த லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், குடும்பத்துக்கு கைகொடுக்க மட்டுமே.

வீட்டுக் கடன் வாங்கிய பிறகு எடுக்கப் போகும் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி உங் களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், நீங்கள் வாங்கிய வீட்டுக் கடன் உங்கள் குடும்பத் தினருக்கு கூடுதல் சுமையாகி விடக் கூடாது என்பதற்காக. இந்த வீட்டுக் கடன் இன்ஷுரன்ஸ் பிரீமியத்துக்கும் வங்கிகள் வீட்டுக் கடனுடன் சேர்த்து கடன் வழங்குகின்றன. இந்தக் கடனை வீட்டுக் கடனுடன் சேர்த்து செலுத்தும்போது அதற்கு வரிச் சலுகையும் கிடைக்கிறது.

ஒருவரின் ஆண்டு சம்பளத்தை போல் சுமார் 12 மடங்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்பது பொதுவான விதி. அப்போதுதான் கிடைக்கும் இன்ஷூரன்ஸ் தொகையிலிருந்து இறந்தவரின் மாதச் சம்பளம் அளவுக்காவது வட்டி வருமானம் கிடைக்கும். இதை வைத்து அந்தக் குடும்பத்தினர் ஓரளவு கஷ்டப்படாமல் வாழ முடியும்.

உதாரணமாக, ஒருவரின் ஆண்டு சம்பளம் ரூ.3 லட்சம் எனில், அவர் குறைந்தது ரூ.36 லட்சத்துக்கு ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டும். இப்போது ரூ.30 லட்சத்துக்கு வீட்டுக் கடன் வாங்குகிறார் என்றால் கூடுதலாக இன்னும் ரூ.30 லட்சத்துக்கு தனியாக லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும்.

பெஸ்ட் இன்ஷூரன்ஸ்

அனைத்து வகையான லைஃப் இன்ஷூரன்ஸ்களிலும் எளிமை யானது, பிரீமியம் குறைவான டேர்ம் பிளான்தான். முடிவில் பணம் கிடைக்காது என்பதால், இதனை யாரும் விரும்பி எடுப்ப தில்லை. குறைந்த பிரீமியத்தில் நிறைய பாதுகாப்பு கிடைக்கும் டேர்ம் பாலிசியை வீட்டுக் கடன் தொகைக்கு இணையாக எடுத்துக் கொள்ளலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்