இ-இன்ஷூரன்ஸ்... ஏன்... என்ன... எப்படி..?

மு.சா.கெளதமன்

ந்திய இன்ஷூரன்ஸ் சந்தையை நெறிமுறைப் படுத்தும் அமைப்பான இன்ஷூரன்ஸ் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (IRDAI) சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி வரும் அக்டோபர் 01, 2016 முதல் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பிரீமியம் செலுத்தும் அல்லது கவரேஜ் தொகை எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் அனைத்தும் இ-இன்ஷூரன்ஸ் பாலிசிகளாக மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. இந்த வழிகாட்டுதல்கள் தனிநபர் பாலிசிகளுக்கு மட்டுமே பொருந்தும்; குரூப் பாலிசிகள் இதுவரை இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

(எந்த வகையான இன்ஷு ரன்ஸ் பாலிசியை எவ்வளவு தொகைக்கு மேல் எடுத்தால் இ-இன்ஷூரன்ஸ் பாலிசியாக எடுக்க வேண்டும் என்பதை அட்டவணையைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.)

நாம் எடுக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் பாலிசி டாக்குமென்ட் இதுவரை சான்றிதழ்களாகவே வழங்கப்பட்டு வந்தது. இதனால் பாலிசிதாரர்களும் இன்ஷுரன்ஸ் நிறுவனங்களும் பல பிரச்னை களை எதிர்கொள்ள வேண்டி இருந்தன. இனி தனிநபர் இன்ஷுரன்ஸ் பாலிசிகளுக்கான பாலிசி டாக்குமென்ட்களை சான்றிதழ்களாகத் தராமல், இணையத்தில் பதிந்து, ஆன்லைனில் அளிப்பதன் மூலம் அதன் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல் இருக்க முடியும்.

இது குறித்து இ-இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விநியோகிக்கும் நான்கு இன்ஷூரன்ஸ் ரெபாசிட்டரிகளில் ஒன்றான கேம்ஸின் (CAMS) முதன்மை செயல் அதிகாரி எஸ்.வி.ரமணனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

“உலகிலேயே முதல் முறையாக இந்தியாதான், இ-இன்ஷூரன்ஸ் கணக்குச் சேவையை வழங்க இருக்கிறது. இப்படி ஒரு இ-இன்ஷூரன்ஸ் திட்டம் உலகில் வேறு எங்கும் இல்லை. இந்தியாவில் லைஃப், நான் லைஃப், ஹெல்த் என்று சுமாராக 37 கோடிக்கும் அதிகமான பாலிசிகள் இருக்கின்றன. அதில் வெறும் 5 லட்சம் பாலிசிகள்தான் இ-இன்ஷூரன்ஸாக மாற்றப்பட்டிருக்கின்றன.

தொடக்கத்தில் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் மட்டுமே இ-இன்ஷூரன்ஸாக எடுக்க முடியும் என்கிற நிலை மாறி, தற்போது எல்லா விதமான இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் இ-இன்ஷூரன்ஸ் முறையில் எடுக்க முடிகிற அளவுக்கு நிலைமை முன்னேறி இருக்கிறது. இந்தியாவில் என்.எஸ்.டி.எல், சி.டி.எஸ்.எல், கேம்ஸ் மற்றும் கார்வி ஆகிய நான்கு நிறுவனங்கள் இந்திய அரசினால் இன்ஷூரன்ஸ் ரெபாசிட்டரி களாக நியமிக்கப்பட்டு இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்