கேட்ஜெட்ஸ்

கார்த்தி

ஜியோமி மி மேக்ஸ் (Xiaomi Mi Max)

பட்ஜெட் மொபைல்களில் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது ஜியோமி நிறுவனம். மொபைல் என்பது 4 இன்ச்சில்தான் இருக்க வேண்டும் என்பதைக் கடந்து, தற்போது 7 இன்ச் வரை வளர்ந்துகொண்டே செல்கிறது. 6.44 இன்ச்சில், MI மேக்ஸ் என்ற மொபைலை சந்தைக்கு தற்போது அறிமுகம் செய்திருக்கிறது ஜியோமி.

6.44 இன்ச் ஃபுல் எச்டி ஸ்கிரீன், 3 ஜிபிரேம், ஸ்நேப்டிரேகன் 650 ஹெக்ஸா-கோர் 1.8 GHz பிராசஸர், 32 ஜிபி இன் பில்ட் மெமரி என சிறந்த ஸ்பெக்ஸிஃபிகேசன் இந்த மொபைல் வெளியாகி இருக்கிறது. மொபைலின் பின்பக்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக ஃபிங்கர் பிரின்ட் சென்சாரும் தரப்பட்டு இருக்கிறது.

இந்த மொபைலில் இருக்கும் சிம் ஸ்லாட் மூலம், நீங்கள் இரண்டு சிம் பயன்படுத்தலாம். அல்லது ஒரு சிம், ஒரு மெமரி கார்டை பயன்படுத்தலாம். மிக மெலிதாக (7.5mm) வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த மொபைலில்  4850mAh பேட்டரி தரப்பட்டு இருக்கிறது. சாதாரண பயன்பாட்டுக்கு, இரு நாட்கள் இந்த பேட்டரி தாங்குகிறது.

16 மெகாபிக்ஸல் ரியர் கேமராவும், 5 மெகா பிக்ஸல் ஃபிரன்ட் கேமராவும் தரப்பட்டு இருக்கிறது. குறைவான ஒளியில் கேமராவின் தரம் சற்றுக் குறைவாக இருந்தாலும், இந்த விலைக்கு இவர்கள் தந்திருக்கும் மற்ற விஷயங்களைக் கருத்தில் கொள்ளலாம். நல்ல அகலமான திரை என்பதால், சினிமா விரும்பிகள் இந்த மொபைலை தேர்வு செய்யலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்