நாணயம் லைப்ரரி: கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்க கரெக்ட் ஃபார்முலா!

புத்தகத்தின் பெயர்: A Mind for Numbers

ஆசிரியர்: பார்பரா ஓக்லே (Barbara Oakley)

பதிப்பாளர்: Penguin Publishing Group

ணக்கு எனக்கு சுத்தமாக வராது என்று சொல்லும் நபரா நீங்கள்? அப்படியானால் பார்பரா ஓக்லே எழுதிய ‘மைண்ட் ஃபார் நம்பர்ஸ்’ என்கிற இந்தப் புத்தகத்தை நீங்கள் அவசியம் படித்தாக வேண்டும்.

‘‘எனக்கு சிறுவயதில் கடிகாரத்தில் மணி பார்க்கத் தெரியாது. அந்த அளவுக்கு நான் ஒரு ஞானசூன்யம். குடும்பச் சூழ்நிலை திடீரென மாறிவிட பணத் தட்டுப்பாடு வந்தது. ராணுவ ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்பதால், அயல் நாட்டு மொழியாக ரஷ்ய மொழியை நான் படித்தேன். ரஷ்ய மொழி எனக்கு சூப்பராக வந்தது. 

படிப்பு முடிந்து ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்தேன். என்னை டெலி கம்யூனிகேஷன் மற்றும் சிக்னலிங் பிரிவில் வேலை பார்க்கச் சொன்னார்கள்.  அங்கே ஆரம்பித்தது  பிரச்னை. கணக்கு, கணக்கு, கணக்கு என்று செல்லும் இடமெல்லாம் திகட்டத் திகட்ட கணக்கு.

எனக்கு கணக்கு சுத்தமாக பிடிக்காது. வேறு வழி இல்லாமல், கணக்கைப் படிக்கத்  துணிந்தேன். முதலில்  கஷ்டமாகவே இருந்தது. அதற்குப்பின் கணக்கையும் அறிவியலையும் எப்படி பயில வேண்டும் என்பதை நான் நன்றாக புரிந்துகொண்டேன். இன்றைக்கு ஒரு பி.ஹெச்டி பட்டதாரியாகவும், இன்ஜினீயரிங் பேராசிரியராகவும் இருக்கிறேன். கணக்கையும் அறிவியலையும் புரிந்துகொள்ளும் வண்ணம் எப்படி நம்முடைய மூளையைப் பழக்கப்படுத்துவது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்ததால் மட்டுமே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்” என்கிறார் ஆசிரியை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்