​நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு இன்றே தயாராவோம்!

மு.சா.கெளதமன்

ம்மில் பலரும் இன்றைக்கு சந்தோஷமாக இருந்தால் போதும் என்றே நினைக்கிறோம். ஆனால், ஓய்வு பெற்றபின் நமது   பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிற அளவுக்கு நம்மிடம் பணம் இல்லை என்றால், நாம் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். இன்றைக்கு மகிழ்ச்சியாக இருப்பது போல ஓய்வு பெற்றபின்னும் அதே மகிழ்ச்சியுடன் இருக்க எப்படித் திட்டமிடுவது..?

இதற்காக நாணயம் விகடன் கடந்த வாரம் சென்னையில் ‘நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நிறைவான முதலீட்டுத் திட்டங்கள்’ என்கிற தலைப்பில் ஒரு விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தியது. மும்பையைச் சேர்ந்த நிதிச் சந்தை நிபுணர் அர்ஜுன் பார்த்தசாரதி இந்தக் கூட்டத்தில் பல ஆலோசனைகளை வழங்கினார்.

“வரும் ஆண்டுகளில் இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப் போகிறது. 2000-ல் 7.6 கோடி பேராக இருந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களின்  எண்ணிக்கை, 2025-ல் 16.8 கோடி பேராகவும், 2050-ல் 32.4 கோடி பேராகவும் அதிகரிக்கப்போகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்