வீட்டுக் கடன் சுலபமாக வாங்க சூப்பர் டிப்ஸ்!

சி.சரவணன்ஹோம் லோன் ஸ்பெஷல்!

சொந்த வீடு - இந்த வார்த்தையைக் கேட்டதும் அனைவருக்கும் ஓர் இனம் புரியாத சந்தோஷம். நம்மில் பலருக்கும் சொந்தமாக ஒரு வீடு வாங்க முடிகிறதெனில், அதற்கு முக்கிய காரணம், வீட்டுக் கடன் என்கிற வசதி. சொந்த வீடு தவிர, வருமான வரியையும் மிச்சப்படுத்த வீட்டுக் கடன் வாங்கி வருகிறார்கள் பலர். இந்த வீட்டுக் கடனை சுலபமாகப் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

கடன் மூலம் வீடு வாங்க முடிவு செய்ததும் முதலில் செய்ய வேண்டியது, கடனை திரும்பச் செலுத்தும் தகுதிக்கான ஆதாரங்களைத் திரட்டுவதுதான். சொத்தின் மதிப்பில் சுமார் 85% வரை கடன் தரப்படும் என்றாலும், கடனைத் திரும்பச் செலுத்தும் தகுதிதான் கடன் தொகையை முடிவு செய்யும்.

வருமான ஆதாரங்களை தயார் செய்யுங்கள்!

உங்கள் சம்பளம் இவ்வளவு என்பதற்கான ஆதாரமாக மூன்று மாத பே சிலிப், வருமான வரிக் கணக்குத் தாக்கல் விவரம், வங்கிக் கணக்கு விவரம் தேவைப்படும். இப்போதெல்லாம் பல நிறுவனங்களில் சம்பளம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. சம்பள விவரம் மெயில் மூலம் பணியாளர்களுக்குத் தெரிவிக்கப் படுகிறது. இந்த நிலையில், அலுவலக ஹெச்ஆர் அல்லது கணக்கியல் பிரிவில், ஓராண்டில் அல்லது மாதம் மொத்தச் சம்பளம் எவ்வளவு என்கிற விவரத்தை குறிப்பிட்டு, அலுவலக லெட்டர் பேடில் வாங்கி வைக்க வேண்டும். இதில் உங்களுக்குக் கிடைக்கும் போனஸ் போன்ற இதர ரொக்க சலுகைகளையும் சேர்த்துக் காட்டும்போது கூடுதல் கடன் கிடைக்க வாய்ப்பாக இருக்கும்.

அடுத்து, வீட்டுக் கடன் வாங்க முடிவு செய்துவிட்டால், பணப் பரிவர்த்தனைகளை பெரும் பாலும் வங்கி மூலம் மேற்கொள் வது நல்லது. பொதுவாக, ஆறு மாத வங்கிப் பரிவர்த்தனை விவரம் கேட்பார் கள். அதில் நீங்கள் ஏதாவது கடன் வாங்கி இருந்தால், அதனை எப்படி திரும்பக் கட்டி இருக்கி றீர்கள் என்கிற விவரங் களை கவனிப்பார்கள்.

குறைந்தபட்ச தொகையைப் பராமரிக்காமல் ஏதா வது வங்கிக் கணக்கு இருந்தால், அதனை சரிசெய்யுங்கள் அல்லது அந்த வங்கிக் கணக்குகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள். இதன் மூலம் சிபில் சிக்கலிலிருந்து தப்பிக்கலாம்.

வருமான வரிக் கணக்கு தாக்கல் முக்கியம்..!

சில வங்கிகள் அல்லது வீட்டு வசதி நிறுவனங்கள் உங்கள் அலுவலகம் அளிக்கும் வருமான விவரம் கொண்ட படிவம் 16-ன் அடிப்படையில் வீட்டுக் கடன் வழங்கும். பெரும்பாலான வங்கிகள் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை கேட்கும். எனவே, முந்தைய ஆண்டுகளில் நீங்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை என்றால் உடனே அதனை மேற்கொள்ளுங்கள்.

பழைய கடன்களை முடியுங்கள்..!

அடுத்து மிக முக்கியமாக செய்ய வேண்டியது, உங்களுக்கு இருக்கும் சில்லறைக் கடன்களை ஒழித்துக் கட்டுவது. உதாரணத்துக்கு, நீங்கள் வாஷிங் மெஷின் வாங்கிய வகையில் இரு தவணைகள் பாக்கி இருக்கிறது. மாதத் தவணை ரூ.3,000 என்றால் ரூ.6,000 பாக்கி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்தக் கடன் முடிந்தபிறகு நீங்கள் வீட்டுக் கடன் வாங்கினால் கூடுதலாக சுமார் ரூ.3 லட்சம் வாங்க முடியும். உடனடியாக வீட்டுக் கடன் வாங்க வேண்டும் என்கிற நிலையில், வாஷிங் மெஷின் கடன் பாக்கி தொகை ரூ.6000-ஐக் கட்டி அந்தக் கடனை முடித்துவிட்டால் கூடுதல் கடன் கிடைக்கும். இதேபோல், கிரெடிட் கார்டு கடன், கார் கடன் பாக்கி இருந்தாலும், அவற்றை முடித்துவிட்டு, வீட்டுக் கடன் வாங்குவது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்