வெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்!

ஜெ.சரவணன்ஹோம் லோன் ஸ்பெஷல்!

மக்கென்று சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை. நம் சொந்த வீட்டுக் கனவை வீட்டுக் கடன் திட்டங்கள் நிஜமாக்கியுள்ளன. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மற்ற கடன்களைக் காட்டிலும் குறைவாக இருப்பதோடு, வரிச் சலுகைகளும் தரப்படுவது கூடுதல் சந்தோஷம். 

கடந்த பத்து வருடங்களில் இந்தியாவில் வீட்டுக் கடன் பெற்றோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் தினமும் ஏராளமானவர்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் வீட்டுக் கடனைப் பொறுத்தவரை, நம்முடைய தேவைக்கு ஏற்ற சரியான கடன் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியமான ஒன்று.

வீட்டுக் கடன் திட்டத்தின் கீழ் நம்முடைய தேவைக்கேற்ப பல வகைகளில் கடன்கள் தரப்படுகின்றன. அவை என்னென்ன, அவற்றுக்கான வட்டி விகிதங்கள் எவ்வளவு என்பதைப் பார்க்கலாம்.

1. இடம் வாங்குவதற்கான கடன்!

வீடு கட்டுவதற்கு முதலில் நமக்கு ஒரு இடம் தேவை. சொந்தமாக வீடு கட்டுவதற்கான இடத்தை வாங்க வங்கிகள் மூலம் கடன் வாங்கிக் கொள்ள முடியும். இடத்தின் மதிப்பில் பொதுவாக 60 முதல் 75 சதவிகிதம் வரை பெரும்பாலான வங்கிகள் கடனாக வழங்குகின்றன. மீதத் தொகையை இடம் வாங்கும் நபரே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். இடம் வாங்கி முதலீடு செய்வதற்கும் இந்தக் கடன் வழங்கப்படுகிறது. ஆனால், வீடு கட்டினால் மட்டுமே வரிச் சலுகை கிடைக்கும்.

2. வீடு வாங்கக் கடன்!


ஏற்கெனவே கட்டப்பட்ட புதிய அல்லது பழைய வீட்டை வாங்குவதற்கான கடன்தான் வீட்டுக் கடன். இதற்கும் வீட்டின் சந்தை மதிப்பில் 85 சதவிகிதத்துக்குக் கடன் கிடைக்கும்.

3. வீட்டு கட்டுமானக் கடன்!

ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டை வாங்காமல், தமக்குச் சொந்தமான இடத்தில் தங்களின் விருப்பத்துக்கேற்ப வீடு கட்டிக்கொள்ள வாங்கும் கடன் வீட்டு கட்டுமானக் கடன் ஆகும். கட்டுமான மதிப்பில் 85% வரை இந்தக் கடன் கிடைக்கும். ஒரு வருடத்துக்குள் மனை வாங்கி இருந்தால் அதன் மதிப்பும் கட்டுமானச் செலவில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அதிக கடன் வழங்கப்படும். இந்த நடைமுறை வங்கிகளுக்கு வங்கி மாறுபடும்.  

4. வீட்டு மேம்பாட்டுக் கடன்!

ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டை மேலும் மேம்படுத்த இந்தக் கடன் வழங்கப்படுகிறது. வீட்டை உள்ளே மற்றும் வெளியே அழகுபடுத்த, வீட்டைப் புதுப்பிக்க, பழுது பார்க்க, வாட்டர் ஃப்ரூப்பிங் செய்ய, தரையை மேம்படுத்த, மின்சார மற்றும் மர வேலைப்பாடுகள், குழாய் பராமரிப்பு, சமையல் அறையை வசதியாக மாற்ற என பல தேவைகளுக்காக இந்தக் கடன் வழங்கப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்