போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பு... முதலீட்டாளர்களுக்கு லாபமா?

ஜெ.சரவணன்

மீபத்தில் ஐடிசி நிறுவனம் போனஸ் பங்கு தருவதாக அறிவித்தது. அப்போது அதன் பங்கு விலை ரூ.350 - 365 என்ற வரம்பில் இருந்தது. கடந்த ஜூன் 30-ம் தேதி திடீரென்று அதன் பங்கு விலை ரூ.240 - 245-ஆகக் குறைந்தது. போனஸ் பங்கு கிடைக்கும் என்று இந்தப் பங்கை வாங்கியவர்கள் நஷ்டமடைந்துவிட்டதாக அதிர்ச்சி அடைந்தனர். பங்குச் சந்தையில் போனஸ், பங்குப் பிரிப்பு போன்ற நடவடிக்கைகள் பற்றி சரியாக தெரிந்துகொள்ளாததால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். உண்மையில் போனஸ், பங்குப் பிரிப்பு இரண்டுக்கு மான வித்தியாசம் என்ன, இதனால் பங்கின் விலை ஏன் குறைகிறது, இவற்றினால் முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம் என்கிற கேள்விகளை பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பனிடம் கேட்டோம். 

“போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பு நடவடிக்கைகளின்போது அதிகரிக்கப்படும் பங்கு எண்ணிக்கைக்கு ஏற்ப பங்கின் விலை சமநிலைப்படுத்தப்படும். இதனால்தான் பங்கின் விலை குறைகிறது. ஆனால், உண்மையில் ஒருவர் செய்த முதலீட்டின் மதிப்பு போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பு நடவடிக்கையினால் குறையாது. போனஸ் மற்றும் பங்குப் பிரிப்புக்குப்பின் முதலீட்டாளரிடம் உள்ள பங்கு களின் எண்ணிக்கைக் கூடுவதால் அவற்றின் விலை குறைந்திருந் தாலும் மொத்த மதிப்பு கிட்ட தட்ட அப்படியேதான் இருக்கும். 

நிறுவனங்கள் போனஸ், பங்குப் பிரிப்பு நடவடிக்கைகளில் இறங்குவதற்குக் காரணம், நிறுவனத்தின் லிக்விடிட்டியை அதிகப்படுத்த விரும்புவதுதான். போனஸ் மற்றும் பங்குப் பிரிப்பின்போது அந்த நிறுவனப் பங்கின் விலை கணிசமாகக் குறைவதால், பல  முதலீட்டாளர் களால் அந்தப் பங்கை வாங்கி முதலீடு செய்யும் நிலை உருவா கிறது. இதன் மூலம் வர்த்தகமாகும் நிறுவனத்தின் பங்குகளின் வால்யூம்களும் அதிகமாக இருக்கும்.

போனஸ், பங்குப் பிரிப்பு: என்ன வித்தியாசம்?


போனஸ் வழங்கும் கம்பெனி, அடிப்படையில் வலுவாக இருக்கும். ஏனெனில் ஒரு நிறுவனம் லாபத்தில் டிவிடெண்ட் கொடுத்தது போக தன்னிடம் உள்ள கையிருப்புத் தொகைக்கேற்ப போனஸ் பங்குகளை வழங்குகிறது. போனஸ் என்பது ஒரு நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு அளிக்கும் இலவசப் பங்கு களாகும். இது ஏற்கெனவே வைத்திருக்கும் ஒரு பங்குக்கு ஒன்று அல்லது இரண்டு பங்குக்கு ஒன்று அல்லது 5 பங்குக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு ஐந்து என்பது போன்ற விகிதத்தில் இருக்கும். போனஸ் பங்குகள் வழங்கும் போது, நிறுவனத்தின் மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அதன் பங்கு மூலதனமும் அதிகரிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்