பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964.

இண்டெக்ஸ் :

சற்றே பலமான ஏற்ற இறக்கங்கள் கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு நிஃப்டி இண்டெக்ஸ் கடந்த வாரத்தில் சற்றே அமைதியாக பெரிய ஏற்ற இறக்கங்கள் இல்லாத வாரமாக இருந்தது. 

கடந்த வாரத்தின் வர்த்தக நாட்களில் குறைந்த அளவிலான லெவல் களுக்குள்ளேயே வர்த்தகங்கள் நடைபெற்றது. கடந்த வாரத்தில் பெரிய விலை ஏற்றங்கள் அல்லது அதிகப்படியான வால்யூம் வர்த்தகங்கள்  எதுவும் நடைபெற வில்லை. எனவே, இண்டெக்ஸும் பெரிய ஏற்றத்தையோ இறக்கத்தையோ காட்டவில்லை.

கடந்த வாரத்தில் செய்திகளின் அளவு குறைவாக இருந்ததோடு, வெளிவந்த செய்திகள் சந்தையை ஒரு குறிப்பிட்ட திசைக்கு மாற்றுவதற்குள் மற்றொரு செய்தி சந்தையின் போக்கை மாற்றத் தொடங்கிவிட்டது. மொத்தத்தில் எந்த செய்தியும் சந்தையின் திசையை வலுவாகத் தீர்மானிக் கவில்லை.

ஒட்டுமொத்தத்தில் கடந்த வார வர்த்தகங்கள் குறிப்பிட்ட பங்கு களுக்கான சந்தையாகவே இருந்தது. கடந்த வாரத் தின் நான்கு வர்த்தக நாட்களிலும் சந்தையின் மொத்த ஏற்ற இறக்கமும்,   ஏறக்குறைய 100 புள்ளிகளில்தான் இருந்தது. இதே 100 புள்ளிகள்தான் ஒவ்வொரு வர்த்தக நாளின் அதிகபட்ச ஏற்ற இறக்கமாக இருந்தது. இந்த ஏற்ற இறக்க லெவல்களே சென்ற வாரத்தில் சந்தை எவ்வளவு மந்தமாக வியாபாரம் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த மந்தநிலை நமக்கு இரண்டு விஷயங்களைத் தெளிவாக சொல்கிறது. ஒன்று, அடுத்த வாரமும் இதே போல் சந்தை ஒரு குறிப்பிட்ட லெவல்களுக்குள்ளேயே வர்த்தகமாகிக் கொண்டிருக்கும். அல்லது இரண்டாவதாக கடந்த வாரத்தில் ஏற்பட்ட மந்தநிலையை சரிகட்டும் விதத்தில் சற்றே கூடுதல் ஏற்ற இறக்கத்தோடு சந்தை வர்த்தக மாகலாம்.

இரண்டாவதாகச் சொல்லப்பட்ட விஷயம், சந்தையில் நடக்க வேண்டுமானால், சந்தையில் செய்திகளின் வரத்து இருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையைப் பார்த்தால், அது போன்ற செய்தி வரத்துக்கள் இருப்பதாகவோ, வருவதற்கான வாய்ப்புகளோ இல்லை என்று தான் தோன்றுகிறது.

தற்போது சந்தையின் மந்தநிலையால ஏற்பட்டிருக்கும் விலை பாதிப்பு குறைவானது தான். தற்போது சந்தை ஒரு விதமான டைம் கரெக்‌ஷனுக்கு தயார் ஆவது போல் தோன்றுகிறது.

எனவே, அடுத்த வாரத்தில் பெரிய ஏற்ற இறக்கத்துக்குத்  தயாராக இருக்க வேண்டி இருக்கும். நிஃப்டி அதிகபட்சமாக 8150 புள்ளிகள் வரைக்கும், பேங்க் நிஃப்டி அதிகபட்சமாக 17300 புள்ளிகள் வரைக்கும் இறக்கம்  கண்டால் அதை வாங்குவதற்கான வாய்ப்பாகக் கருதலாம். நிஃப்டி 8400 புள்ளிகளைக் கடந்தால்தான்  வலுவான வர்த்தகம் நடைபெறும். குறிப்பாக, அடுத்த வாரத்தில் வலுவான  வர்த்தகத்தை மேற்கொள்வது கடினமாக இருக்கலாம். அடுத்த வாரத்தில் மிகக் கச்சிதமான ஸ்டாப்லாஸை வைத்துக் கொண்டு சந்தையின் போக்கை கண்கானித்து வர்த்தகங்களை மேற்கொள்வது நல்லது.

எல்ஐசி ஹவுசிங் (LICHSGFIN)

தற்போதையை சந்தை விலை : ரூ.511.15

கடந்த ஆறு மாத காலமாக இந்த பங்கின் விலை வலுவான ரேஞ்சுகளுக்குள் நிலைபெற்று வர்த்தகமாகி வந்தது. இந்த பங்கு கடந்த வாரத்தில் சமீபத்தில்தான் தன்னுடைய வலுவான ரெசிஸ் டென்ஸான 510 லெவல்களைக் கடந்து பிரேக் அவுட் ஆகி வர்த்தகமாகத் தொடங்கி இருக்கிறது. இந்த விலை ஏற்றம் அடுத்துவரும் வாரங்களிலும் தொடர வேண்டும். அப்படி விலை ஏற்றம் தொடர்ந்தால், இந்த பங்கின் விலை அதிகபட்சமாக 530 - 540 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே தற்போதையை விலையில், இந்தப் பங்கில் 500 ரூபாய் ஸ்டாப் லாஸ் வைத்து, லாங் பொசிஷன் எடுக்கலாம்.

ஹிமத்சிங்கா செய்டு (HIMATSEIDE)

தற்போதையை சந்தை விலை : ரூ.261.45


இந்த பங்கில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக ஒரு நல்ல நிலையான டிரெண்ட் நிலவுவதை பார்க்க முடிகிறது. கடந்த ஒன்றரை ஆண்டு காலகட்டத்தில், அதன் உச்சபட்ச விலை இருக்கு மிடத்தில் ஒரு அருமையான அதே நேரத்தில் அரிதான இன்வெர்ஸ் ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் (Inverse Head and Shoulders) பேட்டன் உருவாகி இருக்கிறது. கடந்த வாரத்தில் இந்த பேட்டனால் ஏற்படும்  வேகம் வெளியேறி, வலுவான வால்யூம்கள் மற்றும் பெரிய டீல் களினால் அதன் மொமென்டம் கூடி இருக்கிறது. எனவே, இந்த பங்கை தற்போதைய விலையில் வாங்கலாம். இதற்கு ஸ்டாப் லாஸாக 250 ரூபாய்க்குக் கீழ் வைத்துக் கொள்ளலாம். டார்கெட் விலை 290 ரூபாய்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்