டிரேடர்களே உஷார் - 15

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எலிப் பொறி! தி.ரா.அருள்ராஜன் தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

ஷேர் மார்க்கெட்ல பணம் பண்றதுன்னா எப்படி? ஒரு பங்கின் விலை சந்தையில ஏறும்போது மளமளவென்று வாங்கவேண்டும். நல்லா ஏறுச்சா..... சடசடன்னு வித்துட்டு வெளியே வந்திடனும். இதுதான் கந்தசாமியின் சிந்தாந்தம். கந்தசாமி உஷாரான ஆளு. மார்க்கெட்டைக் கவனிச்சிக்கிட்டே இருப்பார்.

எந்தப் பங்கின் விலை ஏற ஆரம்பிக்கிறதோ, அந்தப் பங்கை அப்படியே தன்னோட கண்காணிப்பு லிஸ்ட்ல கொண்டு வருவார்.

அப்புறம் அதைப் பற்றிய செய்திகளை சேகரம் பண்ணுவார். பின்பு, செய்தித் தாள்களிலும், டிவியிலும் அந்த நிறுவனம் பற்றிய செய்திகள் ஏதாவது வருகிறதா என்று உன்னிப்பாக பார்ப்பார். அப்படி செய்திகள் வரவர, அவர் தேர்வு செய்த பங்கினை வாங்க ஆரம்பிப்பார். பின்பு விலை நன்கு ஏறும்போது விற்று லாபத்தை வெளியே எடுப்பார்.

இந்த டெக்னிக்கை அவர் யாரிடமும் சொல்ல மாட்டார். அவரோட நண்பர் மனுநீதி, இதைப்பற்றி அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருப்பார்.  இருந்தாலும், சொல்ல மாட்டார். இருந்தாலும் விடாமல் நச்சரிப்பார். வழக்கமாக வாரக் கடைசியில் இருவரும் ஒரு பார்க்கில் சந்திப்பார்கள்.
அன்றும் அப்படித்தான் சந்தித்தார்கள். மனுநீதி, ‘‘ஏம்பா கந்தசாமி, உலக விஷயம் எல்லாத்தையும் பேசற, ஆனா... இந்த ஷேர் மார்க்கெட்ல எப்படி பணம் பண்றன்னு கேட்டா மட்டும் ஏன் பேச்சை மாத்துறே?’’

‘‘சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல மனு, அப்படியே மார்க்கெட்ட கவனிச்சிக்கிட்டே இருக்கணும், அவ்வளவுதான்.’’ 
 
‘‘இல்ல கந்தசாமி, எனக்கு மார்க்கெட் பத்தி ஒண்ணும் தெரியாது. ஷேர் மார்க்கெட்டைப் பத்தி பேசினாவே என் மனைவி எரிந்து விழறா. நீ எப்படி பணம் பண்றியோ, அதை எனக்கும் சொல்லிக் கொடுத்தா, நானும் பண்ணுவேன். லாபத்தைக் காட்டினா, என் மனைவியும் சமாதானம் ஆய்டுவா. கொஞ்சம் சொல்லிக் கொடேன்.’’

மனுவின் கெஞ்சல், கந்தசாமியின் மனதை கொஞ்சம் கரைத்தது.

‘‘சரி, கந்தசாமி, உனக்கு நான் அதை கொஞ்சம் கொஞ்சமா சொல்லித் தர்றேன்.’’  

‘‘அப்பா... கந்தசாமி இப்பவாது உனக்கு சொல்லணும்னு மனசு வந்துச்சே! சரி, தினம் உனக்கு கால் பண்றேன்.’’

மறுநாள் இரவு, சொன்ன படியே மனு, கந்தசாமிக்கு போன் பண்ணி, பேச ஆரம்பித்தார். ‘‘சொல்லு கந்தசாமி நாளைக்கு எந்த கம்பெனி வாங்கலாம்?”

‘‘அவசரப்படாதே மனு. இன்னிக்கு  மார்க்கெட்ல நல்லா ஏறின கம்பெனி லிஸ்ட மொதல்ல எடுக்கணும். அதுல ஒரு ஐந்து கம்பெனியை ஃபாலோ பண்ணனும். அப்புறம், அந்த கம்பெனிய பற்றிய செய்தி பேப்பர்ல, டிவில வருதான்னு பாரு. இன்னக்கி இதுபோதும்’’ என்று போனை துண்டித்தார், கந்தசாமி.

மனு, உடனே கம்ப்யூட்டரை ஆன் பண்ணி, சில வெப்சைட்ல தேட ஆரம்பித்தார். இன்னிக்கு ஏறிய பங்குகள் என்று ஒரு லிஸ்ட்டைத் தயார் செய்தார். அதுவே ஒரு பெரிய லிஸ்டாக இருந்தது. ஏறிய பங்குகளின் பெயர்களை ஒரு நோட்டில் எழுதினார். பின் கந்தசாமிக்கு ஒரு போன் அடித்தார்.

‘‘கந்தசாமி, நீ சொன்ன மாதிரியே, ஏறுகிற கம்பெனியெல்லாம் ஒரு லிஸ்ட் போட்டுட்டேன்.’’

கந்தசாமி சில நிறுவனங்களை மட்டும் தேர்வு செய்து கொடுத்தார். கடந்த 5 நாட்களில் எந்தப் பங்கின் விலை தொடர்ந்து ஏறுகிறது என்று பார்க்க ஆரம்பித்தார். அதில் அசோக் அண்ட் கம்பெனியின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டு இருப்பதைப் பார்த்தார்.  கடந்த 5 நாட்களில் அசோக் அண்ட் கம்பெனி பங்கின் விலை ரூ.55-ல் இருந்து ரூ.80 என்ற விலையை தொட்டு இருந்தது.

அசோக் அண்ட் கம்பெனியை பற்றிய செய்திகளை சேகரிக்க ஆரம்பித்தார். அசோக் அண்ட் கம்பெனி வைர நகைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் என்பதைக் கண்டறிந்தார். மேலும் செய்திகளைத் துழவினார். அந்த நிறுவனம் அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் வைர வியாபாரத்தை துவங்கப் போவதாகச் செய்திகள் வந்திருந்தது.

மனுவின் மனதில் இதை எல்லாம் செய்தபின், நாம் சரியான டிராக்லதான் போய்கொண்டு இருக்கிறோம் என்று திருப்தியாகவே இருந்தது.

அடுத்து இந்த நிறுவனம் பற்றிய செய்திகள் வேறு எங்கெல்லாம் வருகிறது என்று பார்க்கவேண்டும். குறிப்பாக,  ஆங்கில டிவி சேனலைப் பார்க்கும்படி கந்தசாமி சொல்லி இருந்தார்.

மனு, ஒரு ஆங்கில டிவி சேனைலை ஆன் பண்ணினார். அவருக்கு சுத்தமாக விளங்க வில்லை. என்றாலும் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தார். திடீரென்று திரையில் அசோக் அண்ட் கம்பெனி பற்றிய செய்தி வர ஆரம்பித்தது. மனு உஷாரானார்.

டிவி திரையில் அந்த லேடி தொகுப்பாளர் பேச ஆரம்பித்தார். ‘‘அசோக் அண்ட் கம்பெனி கடந்த சில தினங்களாக ஏறுமுகமாக இருக்கிறது. இதற்கான காரணம் என்ன? இன்னும் இந்த நிறுவனம் தன் வளர்ச்சிக்கு எந்தத் திட்டங்கள் வைத்திருக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம், அசோக் அண்ட் கம்பெனியின் எம்.டி. திரு.அசோக் அவர்களிடம் கேட்போம்’’ என்றவுடன் திரையில் மிஸ்டர் அசோக்கும் தோன்றினார்.

‘‘குட்மார்னிங் மிஸ்டர் அசோக், உங்க அசோக் அண்ட் கம்பெனி பங்கின் விலை கடந்த சில தினங்களாக ஏறிக்கொண்டு இருக்கிறது. அதை பத்தி நிறைய செய்திகளும் வந்துகொண்டு இருக்கிறது. உங்க கம்பெனி பற்றிய உண்மையான செய்திகளை எங்களுடைய நேயர்களுக்கு சொல்லுங்களேன்.’’

‘‘அசோக் அண்ட் கம்பெனி, டைமண்ட் வியாபாரத்தில முன்னணியில இருக்கிறது உங்களுக்கே தெரியும். எங்கள் நிறுவனம் இப்போது இந்தியா முழுவதும் டைமண்ட் நகைகளை விற்கிறது. இப்போது அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் வியாபாரத்தை விஸ்தரிக்க உள்ளோம். இதனால் எங்கள் லாபம்கூடும்.’’
 
மனுவுக்கு இதையெல்லாம் கேட்கும்போது பரவசமாக இருந்தது. கந்தசாமி சொன்னமாதிரி நாம் தேர்வு செய்த கம்பெனியில் எல்லா விஷயங்களும் நடக்கிறதே!

மார்க்கெட்டில் அசோக் அண்ட கம்பெனி விலையைப் பார்த்தார். அது இப்போது ரூ.95-ஆக வர்த்தகம் ஆகிக்கொண்டு இருந்தது. உடனே புரோக்கர் ஆபிஸுக்குப் போன் செய்தார். ரூ.95-க்கு ஆயிரம் அசோக் அண்ட் கம்பெனி ஷேர் வாங்கினார். புரோக்கர், ‘‘சார், இப்ப விலை ரூ.96’’ என்றார். ‘‘சரி, ரூ.96-ல வாங்குங்க’’ என்றார் மனு. புரோக்கர், ‘‘சார் இப்ப விலை ரூ.97’’.  ‘‘சரி, வாங்குங்க.’’ ‘‘சார், விலை இப்ப ரூ.98’’. ‘‘யோவ், மார்க்கெட் வெலையில வாங்குய்யா...’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்