மைக்ரோ தொடர் - 4

மு.சா.கெளதமன்பாபாஜியின் பிசினஸ் ஸ்ட்ராட்டஜி!நம் மக்களுக்கு தேவையானதை தர நாங்கள் வந்துவிட்டோம்!‘பதஞ்சலி’ ஆச்சார்யா பேட்டி!

தஞ்சலி நிறுவனத்தின் அபார வளர்ச்சி குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கும் ஆச்சாரியா பாலகிருஷ்ணா நமக்களித்த பேட்டி இனி:

நீங்கள் ஏன் எஃப்.எம்.சி.ஜி துறையில் நுழைந்தீர்கள், இந்தத் துறையில் நுழையும்போது இவ்வளவு வளர்ச்சி காண வேண்டும் என்று இலக்கு ஏதாவது இருந்ததா? 

‘‘நாங்கள் இந்த நிறுவனத்தை 2006-ல் தொடங்கியபோது, மக்களுக்குத் தேவையான சத்தான உணவுகள் மற்றும் பொருட்களை உயர்ந்த தரத்தில்,  குறைவான விலையில்  தரவேண்டும் என்றுதான் தொடங்கினோம். இவ்வளவு பெரிதாக நிறுவனத்தை வளர்க்க வேண்டும், இவ்வளவு விற்பனை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எதுவும் எங்களிடம் அப்போது இல்லை.’’

நீங்கள் 2006-ல் இருந்து இந்தத் துறையில் செயல்படத் தொடங்கினாலும், 2012, 2013 காலகட்டங்களில்தான் பெரிய வளர்ச்சி காணத் தொடங்கினீர்கள். இந்த வேகத்தை ஏன் தொடக்கத்திலிருந்து காட்டவில்லை?

‘‘2010 காலகட்டத்தில்தான், எங்களிடம் யோகா பயில வந்தவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பற்றி விரிவாக பாபாவிடம் சொன்னார்கள், அதன்பிறகுதான் நாமே இந்தப் பொருட்களைத் தயாரித்து கொடுத்தால் என்ன என்று தோன்றியதால், ஒவ்வொரு பொருளாக தயாரித்து சந்தைக்கு கொண்டு  வந்தோம். பதஞ்சலியிடமிருந்து ஒரு பொருள் புதிதாகச் சந்தைக்கு வருகிறது என்றால், முன்பே அது பெரும்பாலான மக்களால் விரும்பிக் கேட்கப்பட்ட ஒன்றாக மட்டுமே இருக்கும். ஆக எப்போதும் மக்களின் தேவையைப் பொறுத்துதான் நாங்கள் பொருட்களைத் தயாரிக்கிறோம்.’’

இந்த ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாயை இலக்காக நிர்ணயித்திருக்கிறீர்களே, இது சாத்தியமா? என்ன மாதிரியான திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?

‘‘பாபா ராம்தேவ்ஜி சொல்லிவிட்டார். எனவே, அது நிச்சயம் நடக்கும். எங்களிடம் எந்த மார்க்கெட்டிங் திட்டமும் இல்லை. நாங்கள் நல்ல தரமான பொருட்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். எனவே, தரமான பொருட்களை பதஞ்சலி தரும் என்கிற நற்பெயரே போதும் எங்கள் பொருள்கள் நன்றாக விற்பனை ஆவதற்கு. எனவே, இந்த சாதனை சாத்தியம்தான். குறிப்பாக, நாங்கள் இவ்வளவு வளர வேண்டும் என்கிற எண்ணத்தோடு எல்லாம் நிறுவனத்தை தொடங்கவில்லை. மேலும், இலக்கை அடையவில்லை என்பதற்காக வருத்தப்பட நாங்கள் ஒன்றும் லாபத்தை மட்டுமே பார்க்கும் கார்ப்பரேட் எம்.என்.சி-க்கள் இல்லை.’’

குறைந்த விலைக்குப் பொருட்களை கொடுக்க உங்களுக்கு இந்தியா முழுவதும் உற்பத்தி ஆலைகள் இருக்க வேண்டுமே!

‘‘எங்களுக்கு இப்போதைக்கு ஹரித்துவாரில் மட்டும்தான் உற்பத்தி ஆலை இருக்கிறது. ஆனால், நாங்கள் குறைந்த விலைக்குப் பொருட்களைக் கொடுப்பதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. எங்கள் பதஞ்சலி நிர்வாகத்தில் டாப் பிராஸ் என்று சொல்லக்கூடிய பெரிய பதவிகளில் இருக்கும் நபர்கள் யாரும் 1 ரூபாய்கூட சம்பளமாக பெறுவது இல்லை. இதில் நானும் அடக்கம். இதனால் எங்களுடைய செலவுகள் குறைகிறது. எங்களால் குறைந்த விலைக்குப் பொருட்களைத் தர முடிகிறது. ஆனால், எங்கள் கீழ்நிலை ஊழியர்களுக்கு நாங்கள் மற்ற எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களில் வழங்கப்படும் சம்பளத்தை போலவே வழங்குகிறோம். அவர்கள்தான் எங்கள் பொருட்கள் சரியாக மக்களை சென்றடைய காரணமானவர்கள் இல்லையா!’’

இந்தியாவில் வேறு எங்கு  உற்பத்தி ஆலைகளை நிறுவ இருக்கிறீர்கள் ?

‘‘மொத்த இந்தியாவுக்கும் மத்தியப் பகுதியாக இருக்கும் நாக்பூரில் 600 ஏக்கர் நிலப்பரப்பில், தற்போது இருக்கும் பதார்தா உற்பத்தி ஆலையைவிட பரப்பளவிலும், உற்பத்தித் திறனிலும் நான்கு மடங்கு பெரிதாக ஒரு ஆலையை நிறுவ இருக்கிறோம். மஹாராஷ்டிரா, கவுகாத்தி, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தமிழகம் போன்ற பகுதிகளில் உற்பத்தி ஆலைகளை நிறுவ இருக்கிறோம். குறிப்பாக, தமிழகத்தில், தேனி மாவட்டத்தில் 250 ஏக்கர் நிலத்தில் மூலிகைப் பயிர்களைச் சாகுபடி செய்யத் தொடங்கி இருக்கிறோம். இதுதான் எங்களின் அடுத்த ஐந்து வருட செயல் திட்டமும்கூட.’’ 

உங்களுடைய செயல்பாட்டு லாப வரம்பு எவ்வளவு?

‘‘சராசரியாக 10 சதவிகிதம்.’’

தமிழகத்தில் பதஞ்சலியின் விற்பனை எப்படி இருக்கிறது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்