லாபம் தரும் தொழில்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எப்போதும் லாபம் தரும் டிஷ்யூ பேப்பர் தொழில்! த.சக்திவேல்

ரு காலத்தில் வியர்வையில் நனைந்த முகத்தைத் துடைத்துக் கொள்ள கர்சீப்பைத்தான் பயன்படுத்தினோம். ஆனால், இன்றைக்கோ  கர்சீப்பைக் கொண்டு முகத்தைத் துடைத்துக் கொள்ள யாருக்கும் விருப்பமில்லை. அதை பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொள்வதில் பலருக்கும் தயக்கம். எனவே, ஆங்காங்கே டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்தி, முகத்தில் இருக்கும் வியர்வையையும் எண்ணெய்ப் பசையையும் நீக்கிக் கொள்வது இன்றைய இளைய தலைமுறைக்கு வழக்கமான விஷயமாகிவிட்டது.

அது மட்டுமல்ல, ஹோட்டலில் சாப்பிட்டபிறகு கை துடைப்பதில் இருந்து ஜலதோஷம்  பிடித்து விட்டால் மூக்கைத் துடைப்பது வரைக்கும்  பலரும் இன்றைக்கு டிஷ்யூ பேப்பரைதான் பயன்படுத்தி வருகிறார்கள். துடைத்தோமா, தூக்கி எறிந்தோமா என்று இருப்பதால் டிஷ்யூ பேப்பருக்கான தேவை எல்லா இடங்களிலும் அதிகரித்து விட்டது. இதனால் இந்தத் தொழிலுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. 

நவீன தொழில்நுட்பத்துடன், லேட்டஸ்ட் இயந்திரங்களுடன் டிஷ்யூ பேப்பரை உற்பத்தி செய்கிற நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமெனில், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், என்னென்ன பொருட்கள் அவசியமாக இருக்க வேண்டும், இந்தத் தொழிலில் இருக்கிற பிசினஸ் வாய்ப்புகள் என்னென்ன என்பதைப் பற்றி கோயம்புத்தூரில் இருக்கிற ஃபெதர் டச் டிஷ்யூஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஷிரோத்கரிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்