கறுப்புப் பணத்தை ஒழிக்க கருணை காட்ட வேண்டாம்!

ஹலோ வாசகர்களே..!

றுப்புப் பணத்தை ஒழிப்பதில் இரண்டு முக்கியமான செய்திகள் வெளியாகி இருக்கிறது. முதல் செய்தி, கறுப்புப் பணம் புழங்குவதைத் தடுக்க ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணத்தை பரிமாற்றம் செய்யக் கூடாது; ரூ.15 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக வைத்திருக்கக் கூடாது என கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) உச்ச நீதிமன்றத்துக்கு அளித்த ஐந்தாவது அறிக்கையில் பரிந்துரை செய்திருக்கிறது.

இந்தப் பரிந்துரை வரவேற்கப்பட வேண்டியது. கறுப்புப் பணம் உருவாக  முக்கிய காரணம், ரொக்கமாக பணத்தைக் கையாள்வதுதான். ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை ஒருவர் வாங்கும்போது, அதற்கான பணத்தை ரொக்கமாகத் தருகிறார். நகைக் கடைக்காரர் இதை கணக்கில் காட்டலாம்; காட்டாமலும் இருக்கலாம். அப்படிக் காட்டாமல் போகும் பணம், கறுப்புப் பணமாக மாறுகிறது. இந்த வழியை அடைக்கத்தான் இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசாங்கம் விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இரண்டாவது தகவல், கடந்த காலங்களில் கணக்கில் காட்டாத வருமானத்துக்கு வரி மற்றும் அபராதம் கட்டுவதற்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அளித்திருக்கும் கால அவகாசம். வருகிற நவம்பர் 30-ம் தேதிக்குள் கணக்கில் காட்டாத பணத்துக்கான வரி, சர்சார்ஜ் மற்றும் அபராதத்தில் 25 சதவிகித வரியையும், 2017 மார்ச் 31-க்குள் 25 சதவிகித வரியையும், மீதமுள்ள வரியை 2017 செப்டம்பர் 30-ம் தேதிக்குள்  கட்டலாம் என்று சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர். கணக்கில் காட்டாத பணத்தை வைத்திருப்பவர்கள் மீது காட்டும் இந்தக் கருணை நியாயமானதல்ல.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்