மியூச்சுவல் ஃபண்ட்... குழந்தைகள் பெயரில் முதலீடு செய்ய முடியுமா?

? எனக்கு 8 வயதிலும், 12 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். குழந்தைகளின் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய என்ன செய்ய வேண்டும்?       

கனகராஜ்,

விஜய்பாபு, நிதி ஆலோசகர், பிளான் டு வெல்த் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், கோவை.

“உங்கள் குழந்தைகளின் பெயர்களில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டுமெனில், மைனர் இன்வெஸ்டர் நடைமுறையை பின்பற்ற வேண்டும். அதற்கு உங்கள் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை இணைத்து உங்கள் பெயரில் உள்ள வங்கிக் கணக்கிலிருந்து காசோலையை கொடுத்து முதலீடு செய்யலாம். பெற்றோர்கள் சட்டபூர்வமான பாதுகாவலர்களாக (legal Guardian) இருப்பார்கள். குழந்தைகளின் 18 வயது முடியும் வரை நீங்கள் முதலீடு செய்ய முடியும். முதலீட்டை திரும்ப பெறும்போது (Redemption) முதிர்வுப் பணம் குழந்தைகளின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்தப்படும்.”
   
? ஐந்து வருடங்களுக்கு முன்பு எல் அண்ட் டி இன்ஃப்ரா பாண்டில் வரிச் சேமிப்புக்காக ரூ.20,000 முதலீடு செய்திருந்தேன். நான் முதலீடு செய்த பணம் குறைந்தது ஏன்?, இந்தப் பணத்தை வெளியே எடுப்பது எப்படி?


ஜோசப்,

த.ராஜன்,இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்.

“எல் அண்ட் டி இன்ஃப்ரா பாண்டில் வரிச் சேமிப்புக்காக செய்த முதலீடு மற்றும் அதற்குரிய வட்டி முதிர்வின் போது உங்களுக்குத் திரும்பக் கிடைக் கும். நீங்கள் போட்ட பணம் குறையாது. அதற்கு உண்டான வட்டியும் சேர்த்துக் கிடைக்கும். இந்த பாண்டுகள் பங்குச் சந்தைகளில் பட்டியல் இடப்படுவதால், அதனுடைய மதிப்பு குறைந்து காணப்படும். நீங்கள் முதிர்வு வரை இந்த பாண்டை வைத்துக் கொள்ளவும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்