சிபில் ஸ்கோர்: கடனைச் சரியாகக் கட்டினாலும் தண்டனையா?

சுச்சேதா தலால், நிர்வாக ஆசிரியர், மணிலைஃப்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சிபில் நிறுவனத்தின் விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் சிபில் ஸ்கோர் அதிகமாக இருக்கும் ஒருவர் கடன் கேட்டுவர, வங்கி அதிகாரி மிக வேகமாக செயல் பட்டு, அவரது கடன் விண்ணப்பத்தின் நடைமுறைகளை முடித்து, சிரித்த முகத்துடன் கடன் தருவார். 

ஆனால், நடைமுறையில் அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர் களுக்கு பெரிதாக எந்தப் பலனும் கிடைப்பதில்லை. வாங்கும் கடனுக்கான வட்டியைக் குறைக்க அது உதவுவதும் இல்லை. 

மாறாக, பத்தாண்டுகளுக்கு முன்பு வாங்கிய கிரெடிட் கார்டு கடனுக்கு, தாமதமாக தவணை கட்டியதைக் காரணம் காட்டி, ‘வேண்டுமென்றே கடனைச் செலுத்தாதவர்’ என்று கடனைப் பெற முடியாமல் செய்துவிடும் நிலைதான் இன்று உள்ளது. அதைவிட மோசமான விஷயம்,  ஒருவருக்கு, அவருடைய கடன் விண்ணப்பம் மறுக்கப்படும் வரை, அவரது கிரெடிட் ரிப்போர்ட் மற்றும் ஸ்கோர் பற்றி எதுவும் தெரிவிக்கப் படாமல் இருப்பதுதான்.

ஆனால், உலகின் பல நாடுகளில் நடப்பதே வேறு. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரே நீங்கள் செலுத்த வேண்டிய கடன் வட்டி விகிதத்தையும் தீர்மானிக் கிறது. நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால் குறைவான வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும் என்பதால், அந்த நாட்டு மக்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் ஒழுக்கத்துடன் செயல்பட்டு, தங்களது கிரெடிட் ஸ்கோரை உயர்த்துவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.

மேலும், அங்கு பெரிய அளவில் கடனைத் திருப்பி செலுத்தாத வர்கள்தான் கடும்  நடவடிக்கை களுக்கு ஆளாகிறார்கள்; சிலருக்கு அதிக வட்டி விகிதத்தில் கடனை யும் தருகிறார்கள். அங்கு கடன் வாங்குபவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய கிரெடிட் ரிப்போர்ட் மற்றும் கிரெடிட் ஸ்கோர் குறித்த  தகவலை குறிப்பிட்ட கால இடைவெளியில்  வங்கி அதிகாரிகள் தெரிவித்து விடுகிறார்கள். இதன் அடிப்படை யில்தான் வங்கிகள் தரும் கடன் அளவு அதிகரிக்கிறது.

இந்தியாவில் கடன் சார்ந்த தகவல்களை நிர்வகிக்கும் பொறுப்பை செய்யும் முதல் நிறுவனமாக சிபில் அமைக்கப்பட்டு, பத்தாண்டுகள் ஆகிறது. இப்போது அதைப் போல, நான்கு நிறுவனங் கள் உள்ளன; ஆனால், கிரெடிட் ரிப்போர்ட் குறித்த அலட்சியப் போக்கு அதிகமாகிக்கொண்டுதான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், ரிஸ்க்கின் அடிப்பையில் கடன் வட்டியை நிர்ணயம் செய்வதிலும், அனைத்து கிரெடிட் தகவல் நிறுவனங்களுக்கும் பழைய தகவல்களைக் கையாள்வ தற்கான ஒரே மாதிரியான அனுமதியைத் தருவதிலும் கடந்த வருடம் வரை ரிசர்வ் வங்கி காட்டிய அலட்சியம்தான்.

லாப நோக்கம் ஏதுமின்றி செயல் படும் மணிலைஃப் ஃபவுண் டேஷன் மூலம் கிரெடிட் ஹெல்ப் லைன் ஒன்றைத் தொடங்கி கடன் குறித்த ஆலோசனைகளை ஆறு ஆண்டுகளாக இலவசமாக தந்து வருகிறோம். கடன்தாரர்களுக்குத் தரவேண்டிய அடிப்படைச் சேவை களையும் விழிப்பு உணர்வையும் முறைப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம். கடந்த மே 16-ம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம் இது குறித்த விரிவான விளக்கக் கடிதம் ஒன்றை சமர்பித்தோம். நாங்கள் தந்த ஆலோசனைகள் இதோ;

1 கடன் வழங்குபவர்கள்ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை முறைப்படி கடைப்பிடிக்க வேண்டும். கடன் மறுக்கப்படுவதற்கான கார ணத்தைத் தெளிவாக விண்ணப் பதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இன்னமும்கூட கிரெடிட் ரிப்போர்ட் டில், வேண்டுமென்றே கடனை திரும்பச் செலுத்தாதவர் பட்டியலில் தனது பெயர் இருக்கிறது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது.

2 வட்டி விகிதம் மற்றும் பிற கட்டணங்கள் போன்ற வற்றில் எழும் பிரச்னைகளை சரி செய்யும் வகையில் ஆரோக்கிய மான விவாதங்கள் கடன் வழங்கு பவர் மற்றும் கடன் பெறுபவர் இடையே நடத்தப்பட வேண்டும். மாறாக, கடன்தாரர்களைத் துன்புறுத்தக் கூடாது.

3 கடன் தகவல் நிறுவனங் கள் சட்டம் 2005 விதிமுறைகளில், கடன்தாரர்கள் குறித்த நெகட்டிவ் தகவல்கள் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் பாதுகாக்கப்படும் என்று இருப்பதை ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே என்று மாற்றப்பட வேண்டும். இதன் நோக்கம் ஒருவருடைய நெகட்டிவ் கிரெடிட் மதிப்பெண் அவரது வாழ்க்கை முழுவதும் பயமுறுத்தும்படி இருக்கக் கூடாது என்பதே. சிக்கலில் இருக்கும் கம்பெனிகளுக்கு சாதக மாக பேங்க்ரப்ட்ஸி தொடர்பான சட்டங்களை அரசு கொண்டுவரும் இந்த நேரத்தில், தனிநபர் ஒருவருக்கு இது போன்ற சில மாற்றங்களை விரும்புவதற்கு உரிமை இல்லையா?

4 ரிஸ்க்கின் அடிப்படையில் வட்டி விகிதத்தை நிர்ண யம் செய்ய வேண்டும். ஒழுக் கமான கடன்தாரருக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் தர வேண்டும். அதே சமயம், முன்பு கடனை ஒழுங்காகச் செலுத்தா தவருக்கு கடன் தர மறுப்பதை விட, அதிக வட்டி விகிதத்தில் கடன் வழங்கி, அவர் தனது தவறைத் திருத்திக்கொள்ளும்  வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும்.

5 கடன் வாங்கியவர்கள் தங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டில் உள்ள தவறு களைத் திருத்திக் கொள்வதற்கான சிறந்த வழிகளையும் அறிமுகப் படுத்த வேண்டும். பல சமயங் களில் வங்கியாளர்கள் வேண்டு மென்றே காரணத்தை உருவாக்கு கிறார்கள்; அது தவிர்க்கப்பட வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்