கம்பெனி ஸ்கேன்: பான்கோ புராடெக்ட்ஸ் (இந்தியா) லிமிடெட்!

(NSE SYMBOL: BANCOINDIA) டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ட்டோமொபைல் துறைக்குத் தேவையான உபகரணங்களான ரேடியேட்டர்கள், சார்ஜ் ஏர் கூலர்கள், ஆயில் கூலர்கள், என்ஜின் கூலிங் அசெம்ப்ளிகள்,  ஹீட் எக்சேஞ்சர்களுக்கு தேவைப்படும் பாகங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் பான்கோ புராடெக்ட்ஸ் (இ) லிமிெடட்  நிறுவனத்தை நாம் இந்த வார கம்பெனி ஸ்கேனில் பார்க்கப் போகிறோம்.

1961-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இந்த நிறுவனம், 1987-ம் ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. 1995-ம் ஆண்டு ஜப்பான் நிறுவனமான மெட்டல் கேஸ்கிட் கம்பெனி என்ற நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த இந்த நிறுவனம், 2010-ம் ஆண்டு ரேடியேட்டர்ன் பேப்ரியக் என்.வி என்ற நெதர்லேண்ட்ஸ் நிறுவனத்தினை வாங்கியது.

2004-ம் ஆண்டில் மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதி நிறுவனமாகிய இந்த நிறுவனம், 2007-ம் ஆண்டில் ஒரு ஸ்டார் ஏற்றுமதி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டது.

2008-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி வசதிகள் மத்திய அரசின் அங்கீகாரத்தைப் பெற்றது. இந்தியாவில் பித்தளை முலாம் பூசப்பட்ட அலுமினியம் ரேடியேட்டர்களையும், தாமிரத்தினாலான ரேடியேட்டர் களையும் தயாரிப்பதில் ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது இந்த நிறுவனம்.

அதிவேகமாக வெப்பத்தைக் கடத்தக்கூடிய மற்றும் குறைந்த எடை மற்றும் அளவிலான ரேடியேட்டர்களே ஆட்டோமொபைல் நிறுவனங் களினால் விரும்பப்படுகின்றன.  காரணம், பானெட்டினுள் குறைந்த இடமே தேவைப்படும். மேலும், மைலேஜும் அதிகம் கிடைக்கும் என்பதால், இந்த வகை ரேடியேட்டர்களுக்கு அதிக அளவிலான டிமாண்ட் இருக்கிறது. இது தவிர, எடை குறைவதால் உற்பத்திக்கான மூலப்பொருளின் அளவும் கணிசமாகக் குறைவதால் செலவும் கணிசமாகக் குறைகிறது. 

அதிவேக இன்ஜின்களில் உபயோகப்படுத்தப்படும் டர்போ இண்டர்கூலர்களையும் இந்த நிறுவனம் தயாரிக்கிறது. இவற்றிலும் எடைக்கும் குளிர்விக்கும் திறனுக்கும் இடையே இருக்கும் விகிதாச் சாரமே வாடிக்கையாளர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நிறுவனம் வாகனங் களுக்கான ஈரோ-III  மற்றும் ஈரோ-IV  சட்ட திட்டங்களுக்கு ஏற்றாற்போல் தயாரிப்புகளை தற்போது வழங்கி வருகிறது. இந்த வகை இண்டர்கூலர்களை அலுமினியம் மற்றும் உயர்ரக இன்ஜினீயரிங் பிளாஸ்டிக்கு களைக் கொண்டு தயாரிக்கிறது இந்த நிறுவனம்.

ஆயில் கூலர்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கும் இந்த நிறுவனம், இந்தத் தயாரிப்புகளில் ஈடுபடும் போது ஆட்டோமொபைல் நிறுவனங்களுடன் கைகோர்த்து அவர்களுடைய தேவைகளை முழுவதுமாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப தனது தயாரிப்புகளை வடிவமைக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்