கணக்கில் காட்டாத பணம்... மத்திய அரசின் திட்டத்தினால் என்ன லாபம்?

சி.சரவணன்

ம் நாட்டின் வருமான வரி வசூலை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. முந்தைய ஆண்டுகளில் கணக்கில் காட்டாத வருமானம் மற்றும் சொத்து  இருந்தால் அவற்றுக்குரிய வரியைக் கட்டி ஒழுங்கு முறைபடுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வருமான வரி முதன்மை ஆணையர் என்.சங்கரன் ஐஆர்எஸ் விளக்கிச் சொன்னார்.

‘‘கடந்த நிதி நிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் ‘தானாக முன்வந்து வருமானம் தெரிவிக்கும் திட்டத்தை’ (Income Declaration Scheme, 2016) அறிவித்தார். இந்தத் திட்டம் குடியரசு தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு அமலுக்கு வந்து உள்ளது. முந்தைய ஆண்டுகளில் சரியான வருமானத்தை அறிவிக்காத அனைத்து நபர்களும் ‘தானாக முன்வந்து வருமானம் தெரிவிக்கும் திட்டம் 2016’ மூலம் தங்களின் கணக்கில் காட்டாத வருமானம் மற்றும் சொத்து விவரங்களைத் தெரிவித்து வரி கட்டலாம்.

இந்தத் திட்டம் நிதி ஆண்டு 2015-16 மற்றும் அதற்கு முந்தைய நிதி ஆண்டுகளில் கணக்கில் காட்டாத வருமானம், சொத்துகள் மற்றும் முதலீடுகளுக்குப் பொருந்தும். இதில் அசையும் மற்றும் அசையா சொத்துகள், குறிப்பாக வீடு, மனை, நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், தங்கம் - வெள்ளி போன்றவற்றில் செய்யப்பட்ட முதலீடுகளும் அடங்கும்.

2016, ஜூன் 1-லிருந்து செப்டம்பர் 30 வரையிலான நான்கு மாதங்களுக்கு இந்தத் திட்டம் அமலில் இருக்கும். வருமானம் அல்லது சொத்து மதிப்பின் மீது 30% வரி, 7.5% கிருஷி கல்யாண் செஸ், மற்றும் அபராத வரி 7.5% ஆக மொத்தம் 45% வரி வசூலிக்கப்படும். இந்த வரியில் 25%-ஐ 2016 நவம்பர் 30க்குள்ளும், மீதி 25% வரியை 2017 மார்ச் 31-ம் தேதிக்குள்ளும் கட்டிக் கொள்ளலாம். மீதி வரியை 2017 செப்டம்பர் 30 -ம் தேதிக்குள் கட்டி விட வேண்டும். ஆனால், கணக்கில் காட்டாத சொத்து மற்றும் வருமான விவரத்தை 2016 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தெரிவித்துவிட வேண்டும்.” என்றவர் இந்தத் திட்டம் யாருக்கெல்லாம் பொருந்தாது என்பதையும் சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்