ஷேர்லக்: வேகமெடுக்கும் ரிலையன்ஸ்!

வெள்ளிக்கிழமை மாலை நன்கு இருட்டியபிறகு நம் அலுவலகத் துக்கு வந்தார் ஷேர்லக். நம் கேபினுக்குள் நுழைந்து, ‘‘இந்த வாரம் என்ன ஸ்பெஷல்..?’’ என்று கேட்டவரிடம் உள்ளே பக்கத்தைத் தந்தோம். ‘‘தடுமாறும் ஐபிஓக்கள்.. முதலீட்டாளர் என்ன செய்ய வேண்டும்? சரி யான நேரத்தில் சரியான கட்டு ரையைப் போட்டிருக் கிறீர்கள்’’ என்று நம்மைப் பாராட்டியவர், தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

‘‘சமீப காலமாக சந்தை யில் பாசிட்டிவ் மூட் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, ஐபிஓ-களில் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்து வருகிறார்கள்.

பல ஐபிஓக்களுக்கு 60 மடங்குக்கு மேல் விண்ணப்பங்கள் வந்து குவிகின்றன. பட்டியலிடப்படுகிற நாளில் மட் டும் பங்கின் விலை 50 சதவிகி தத்துக்கு மேல் அதிகரிக்கிறது. இதைப் பார்ப்பவர்கள் கடன் வாங்கியாவது ஐபிஓவில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

எல் அண்ட் டி இன்ஃபோடெக் நிறுவனத்தின் ஐபிஓவுக்கு ஏறக்குறைய 12 மடங்கு மேல் விண்ணப்பங்கள் வந்திருக் கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவாக இந்த நிறுவனப் பங்குகள் வேண்டி 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்கும்போது 2008-ல் ரிலையன்ஸ் பவர் ஐபிஓதான் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அப்போது அந்தப் பங்கு பெருமளவில் சப்ஸ்க்ரைப் ஆக, அமெரிக்க சப்-ப்ரைம் பிரச்னை வெடிக்க, முதலீடு செய்தவர்கள் எல்லாம் பலத்த நஷ்டம் அடைந்தார்கள்.

இப்போது அந்த மாதிரி பெரிய பிரச்னை எதுவும் இல்லை என்றாலும், நல்ல நிறுவனங்களின் ஐபிஓவில் மட்டும் முதலீடு செய்வதே சரி’’ என்று பேசிக் கொண்டே போன வருக்கு வெங்காய பஜ்ஜியும் ஏலக்காய் போட்ட டீயும் தந் தோம். பசியில் இருந்த ஷேர்லக் அதை ரசித்துச் சாப்பிட்டபின், அடுத்த மேட்டருக்குப் போனார்.

‘‘பவர் ஃபைனான்ஸ் கார்ப்ப ரேஷன் இலவச பங்குகளை வழங்குகிறதே?’’ என்று கேட்டோம்.

‘‘பவர் ஃபைனான்ஸ் கார்ப் பரேஷன் (பிஎஃப்சி) நிறுவனத்தின் இயக்குநர் குழு 1:1 இலவசப் பங்குகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

மேலும், இதன் அங்கீகரிக்கப் பட்ட பங்கு மூலதனம் ரூ.2,000 கோடியிலிருந்து ரூ.10,000 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. இதற்கு சிறு முதலீட்டாளர் களிடமிருந்து நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறார் கள்” என்றார்.

‘‘ஜூவல்லரி பங்குகள் விலை திடீரென அதிகரிக்க என்ன காரணம்” என்று விசாரித்தோம்.

‘‘மத்திய அரசு கலால் வரி (எக்சைஸ் டூட்டி) விதிமுறைகளில் தளர்வு செய்திருப்பதே காரணம். ரூ.100 கோடிக்கு குறைவாக தங்கம் தொடர்பான  பொருட்களை உற்பத்தி செய்யும், அதாவது ரூ.1 கோடிக்குக் குறைவாக கலால் வரி கட்ட வேண்டிய நிறுவனங்களுக்கு முதல் இரு ஆண்டுகளுக்கு கலால் ஆடிட் கிடையாது என வியாழக் கிழமை மத்திய அரசு அறிவித்தது.

இதனை அடுத்து, ஜூவல்லரி பங்குகள் விலை அன்று ஒரே நாளில் 5% முதல் 8% வரை அதிகரித்தன. குறிப்பாக, டாரா ஜூவல்ஸ் (8%),கணேஷ் ஜூவல்லரி (6%), ஜோடியாக் - ஜேஆர்டி-எம்கேஜே (5%), கோயங்கா டைமண்ட் & ஜூவல்ஸ் (5%) ஆகிய நிறுவனப் பங்குகளைக் குறிப்பிடலாம்’’ என்று விளக்கம் தந்தார்.  

‘‘காலாண்டு முடிவுகளில் டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோசிஸ் முடிவுகள் எப்படி வந்திருக்கிறது?’’ என்று வினவினோம்.

‘‘ஜூன் காலாண்டு முடிவுகள் வரத் தொடங்கி இருக்கின்றன. கிளவுட் கம்ப்யூட்டிங் வருமானம் கைகொடுத்ததால் டிசிஎஸ் நிகர லாபம் 9.9% அதிகரித்து ரூ.6,317 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், லாப வரம்பு 26-28% என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 25.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதனால் இந்தப் பங்கின் விலை வெள்ளிக்கிழமை அன்று 3.11% குறைந்தது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐ.டி சேவைகள் ஏற்றுமதி நிறுவனமான இன்ஃபோசிஸ்-ன் நிகர லாபம் ஜூன் காலாண்டில் 4.5 சதவிகிதம் குறைந்துள்ளது. வருமான அதிகரிப்பு குறைந்து போனதே இதற்கு காரணம்.

2016-17-ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமான வளர்ச்சி 11.5-13.5 சதவிகிதமாக இருக்கும் என்பது 10.5-12 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஐ.டி துறைக்கு செலவு செய்வது குறைந்துவருவது ஒரு காரணம் என அதன் சிஇஓ விஷால் சிக்கா தெரிவித்துள்ளார். நிதி நிலை முடிவுகள் மோசமாக இருந்ததை அடுத்து இந்தப் பங்கின் விலை வெள்ளிக்கிழமை அன்று 8.8% குறைந்துள்ளது.

பணியாளர் சம்பள அதிகரிப் பால் பொறியியல் சேவை நிறு வனமான சையன்ட் (Cyient)-ன் நிகர லாபம் 2% குறைந்துள்ளது.

சந்தை எதிர்பார்ப்புகளை மீறி ரிலையன்ஸ் -ன் நிகர லாபம் 4.4% அதிகரித்துள்ளது. ஒரு பீப்பாய்க்கான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு 10.8 டாலரிலிருந்து 11.50 டாலராக அதிகரித்தது முக்கிய காரணம். இதனால்தான் ரிலையன்ஸ் பங்கு வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது.

முத்தூட் கேப்பிட்டல் சர்வீசஸ்-ன் நிகர லாபம் 19.4% அதிகரித்துள்ளது. காரணம், இதன் இரு சக்கர வாகன விற்பனை 40% உயர்ந்ததே. கார் கடன் வழங்கவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது’’ என சில முக்கிய நிறுவனங்களின் ரிசல்ட்டை மட்டும் சொன்னார்.

‘‘ஐடிஎஃப்சி பேங்க் பங்கின் விலை அதிகரிக்க ஆரம்பித்தி ருக்கிறதே, என்ன விஷயம்?’’ என்று கேட்டோம்.

‘‘தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 12 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட கிராம விடியல் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தை அது  கையகப்படுத்தி இருப்பதே முக்கிய காரணம். இதற்காக ரூ.1,500 கோடி கைமாறி இருப்பதாக லேட்டஸ்ட் தகவல்.

ஐடிஎஃப்டி-லிருந்து 2015 அக்டோபரில் வங்கியாகப் பிரிந்து செயல்படும் ஐடிஎஃப்சி பேங்க், வேகமான விரிவாக்கத்தில் இருக்கிறது. இதையொட்டிதான் இந்தக் கையகப்படுத்துதல்’’  என்றவர் கிளம்ப தயாரானார்.

‘‘சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பதை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்’’ என்று கோரிக்கை வைத்தோம்.

‘‘ஜூலை 18-ம் தேதி ஆரம்பிக்கும் மழைக்கால கூட்டத் தொடரில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட வில்லை என்றால் நிஃப்டி புள்ளிகள் 8000-க்கு கீழே இறங்கிவிடும் என அனலிஸ்ட்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

மேலும், இது காலாண்டு முடிவுகள் காலம். வரும் வாரத்தில் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளை பொறுத்து சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்படும்’’ என்றவரிடம், ‘‘அப்படியே கவனிக்க வேண்டிய பங்குகளையும் சொல்லலாமே!’’ என்றோம்.

‘‘ஏ.கே.பிரபாகர் நல்ல மிட் கேப் பங்குகளை சொல்லி இருக்காரே! நான் வேறு தரவேண்டுமா?’’ என்று பொய் தயக்கம் காட்டினார்.

பிற்பாடு அவரே, ஒரு துண்டுச் சீட்டைத் தந்தார். அதில் அவர் குறித்திருந்த பங்குகள் இதோ...

கேப்பிட்டல் ஃபர்ஸ்ட், பிஐ இண்டஸ்ட்ரீஸ், எல்ஐசி ஹவுசிங், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கெயில் இந்தியா, விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ், என்சிசி, டிவிஸ் லேப், கிரீவ்ஸ் காட்டன்’.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்