உச்சத்தில் மிட்கேப் இண்டெக்ஸ்... விலை உயர வாய்ப்புள்ள பங்குகள்!

சி.சரவணன், ஜெ.சரவணன்

ந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் தடாலடியாக அதிகரித்து வருகின்றன. இதனைவிட அதிகமாக மிட்கேப் இண்டெக்ஸ் புள்ளிகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூலை 12-ம் தேதி முதல் முறையாக பிஎஸ்இ மிட்கேப் இண்டெக்ஸ் 12000 புள்ளிகளைத் தாண்டி சாதனை படைத்திருக்கிறது. அன்றைய தினம் குறியீட்டில் இடம்பெற்றிருக்கும் பஜாஜ் ஃபைனான்ஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், யெஸ் பேங்க் போன்ற மிட்கேப் பங்குகளின் விலை இதுவரைக்கும் இல்லாத உச்சத்தை தொட்டிருக்கின்றன.

தற்போதைய நிலையில், பெரும்பாலான மிட்கேப் நிறுவனங்கள் உள்நாட்டு விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதால், முதலீட்டாளர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்கள் மிட்கேப் பங்கு களில் முதலீட்டை அதிகரித்து வருகிறார்கள். 

மிட்கேப் பங்குகளில் தற்போதைய உச்ச நிலையில் முதலீடு செய்யலாமா, முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள் எவை என மும்பையைச் சேர்ந்த ஐடிபிஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைவர் (ஈக்விட்டி ரிசர்ச்) ஏ.கே.பிரபாகரிடம் கேட்டோம். விரிவாக பதில் சொன்னார் அவர்.

“தேவை அதிகரிப்பு, நல்ல பருவ மழை, நிலையான கமாடிட்டி விலை போன்றவற்றால் இந்திய மிட்கேப் நிறுவனங்களின் வருமானம், செயல்பாட்டு லாபம், நிகர லாபம் ஆகியவை அதிகரிக்கும்.

இன்று லார்ஜ்கேப் நிறுவனங் களாக இருக்கும் நிறுவனங்கள் ஒரு காலத்தில் மிட்கேப் நிறுவனங் களாக தொடங்கப் பட்டவைதான். பெரும்பாலும் அரசு நிறுவனங்கள் அல்லது பெரிய குழுமங்களை சேர்ந்த நிறுவனங்கள்தான் லார்ஜ்கேப் நிறுவனங்களாக எடுத்த உடனே ஆரம்பிக்கப்படுகின்றன. இன்ஃபோசிஸ், விப்ரோ எல்லாம் மிட் கேப் நிறுவனங்களாக இருந்துதான் இன்றைக்கு லார்ஜ்கேப் பங்குகளாக மாறி இருக்கின்றன. எனவே, இன்றைய நிலையில் சிறப்பாக செயல்படும் மிட்கேப் நிறுவனங்களில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் அது லார்ஜ்கேப் நிறுவனங்களாக மாறும்போது நல்ல லாபம் பார்க்க முடியும்.

மிட்கேப் பங்குகள், லார்ஜ்கேப் பங்குகள் எது வேகமாக வளரும் என்று கேட்டால், மிட்கேப் பங்குகள்தான் என்பது பலரது கருத்தாக இருக்கும். லார்ஜ்கேப் பங்குகள் 10 முதல் 15 சதவிகிதம் வளர்ச்சி காணும் நிலையில், மிட் கேப் பங்குகள் 8 முதல் 10 மடங்கு வளர்ச்சி காணும் என்று சொல்லலாம். நல்ல மிட் கேப் பங்குகளை அடையாளம் கண்டு முதலீடு செய்தால், அவை மல்டிபேக்கர் பங்குகளாக மாறி அதிக லாபம் தரும்” என்றவரிடம் நல்ல பங்குகளை எப்படி அடையாளம் காண்பது எனக் கேட்டோம்.

‘‘நிலையான வளர்ச்சி, தொடர்ந்து லாபம், அதிக ரிட்டன் ஆன் ஈக்விட்டி கொண்ட நிறுவனங்களை கவனித்து முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். அது போன்ற சில பங்குகளை பரிந்துரை செய்கிறேன்.

இந்தப் பங்குகளில் மொத்த முதலீட்டையும் ஒரே நேரத்தில் போட்டுவிட வேண்டாம். முதலீட்டை 4, 5 பகுதிகளாகப் பிரித்து முதலீடு செய்யுங்கள். தற்போதைய விலையில் ஒரு பகுதி வாங்கலாம். நீண்ட கால முதலீடு என்பதால், பங்கின் விலை 10% முதல் 15% குறைந்தாலும் வாங்கிச் சேர்க்கலாம்.

இந்தப் பங்கு முதலீட்டை 2 - 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வைத்திருக்கும்பட்சத்தில், மூன்று மடங்கு லாபம்கூட கிடைக்க வாய்ப்பு இருக்கிறது” என்ற ஏ.கே.பிரபாகர் பரிந்துரை செய் யும் பங்குகள் விவரம் இதோ..!

சிட்டி யூனியன் பேங்க் (CUB)

கும்பகோணத்தை சேர்ந்த நடுத்தர அளவு முன்னணி தனியார் வங்கி இது. இதன் நிகர வட்டி வரம்பு (என்ஐஎம்), 2015-16-ம் நிதி ஆண்டின் நான்காம் காலாண்டில் 3.96 சதவிகிதமாக அதிகரித்தது. ஆனால், இதே அளவு தொடர்ந்து நீடிப்பது கடினம். இருந்தாலும் என்ஐஎம் 3.5-3.6 சதவிகிதமாக தொடரும். காரணம், காசா (CASA) எனப்படும் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்குகளை (இவற்றுக்கு ஜீரோ வட்டி அல்லது 4-6% சதவிகித வட்டி)  அதிகரிக்கும் நடவடிக்கையில் இந்த வங்கி களமிறங்கி இருப்பதாகும்.

முடிந்த 2015-16 -ம் நிதி ஆண்டில் கடன் வளர்ச்சி மேம்பாடு, கட்டணச் சேவை மூலமான வருமானம் உயர்வு, இதர வருமானம் அதிகரிப்பு போன்றவை சிட்டி யூனியன் வங்கிக்கு பாசிட்டிவ்-ஆன விஷயங்களாக இருக்கின்றன.

இந்த வங்கியின் ரிட்டன் ஆன் ஈக்விட்டி (RoE) முடிந்த நிதி ஆண்டில் 15.6% என்கிற அளவில் ஆரோக்கியமாக உள்ளது. இதன் நிகர வாராக் கடன் 1.3 சதவிகிதத்திலிருந்து 1.5 சதவிகிதமாக அதிகரித்திருப்பது கவலை அளிக்கும் விஷயம் என்றாலும் இதர பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது இது குறைவு என்றே சொல்லலாம்.

சுமார் 12 மாத தேக்கநிலைக்கு பிறகு ஜூன் 2015-ம் ஆண்டில் பங்கின் விலை ரூ.105.55 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. இப்போது ரூ.120-க்கு அதிகரித் துள்ளது. வரும் காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்