லார்ஜ்கேப் ஃபண்டுகள் Vs பேலன்ஸ்டு ஃபண்டுகள் - எது பெஸ்ட்?

சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

து சரி அல்லது எது பெஸ்ட் என அலசுவது மனித இயல்பு. அந்த வகையில் இப்போது லார்ஜ்கேப் ஃபண்டுகள் பெஸ்ட்டா அல்லது பேலன்ஸ்டு ஃபண்டுகள் பெஸ்ட்டா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான பதிலைத் துல்லியமாக பார்த்துவிடுவோம்.

லார்ஜ்கேப் ஃபண்டுகள் பெரும்பாலும் பெரிய நிறுவனப் பங்குகளில் தனது முதலீட்டை செய்கின்றன. பொதுவாக, இந்தியாவில் உள்ள டாப் 100 அல்லது 200 நிறுவனப் பங்குகளில் இந்த வகை ஃபண்டுகள் முதலீடு செய்யும். இந்த ஃபண்டுகள் பெரும்பாலும் தாங்கள் நிர்வகிக்கும் தொகையை முழுக்க முழுக்க பங்குகளிலேயே முதலீடு செய்யும். ஒரு சில சதவிகிதங்கள் மட்டும் பாண்டுகள்/ டெபாசிட்டுகள்/ டிபஞ்சர்கள் போன்றவற்றில் முதலீடு செய்யும் – அதுவும் உடனடியாக பணம் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம் என்கிற நோக்கத்துக் காக. ஆகவே, இந்த வகை ஃபண்டு களின் செயல்பாடு முழுக்க முழுக்க சந்தையைப் பொறுத்து இருக்கும்.

சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது இந்த வகை ஃபண்டுகள் நல்ல வருமானத்தைத் தரும். சந்தை வீழ்ச்சி அடையும்போது, இந்த வகை ஃபண்டுகளின் வருமானமும் வீழ்ச்சியைக் காணும்.

ஆனால், பேலன்ஸ்டு  ஃபண்டுகள், கடன் மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகள் இரண்டிலும் கலந்து முதலீடு செய்யும். வரிச் சலுகை பெறவேண்டும் என்கிற நோக்கில் பங்கு சார்ந்த முதலீடுகள் இதில் குறைந்தது 65 சதவிகிதமாக இருக்கும். எஞ்சியது கடன் சார்ந்த முதலீடுகளில் இருக்கும். இந்த 65% அல்லது அதற்கு அதிகமான முதலீடு லார்ஜ்கேப் அல்லது மிட்கேப் பங்குகள் அல்லது இரண்டும் கலந்த முதலீட்டில் இருக்கும். இது ஒவ்வொரு ஃபண்டின் முதலீட்டு ஸ்டைலை பொறுத்தது.

லார்ஜ்கேப் ஃபண்டுகளைப் போல, பேலன்ஸ்டு ஃபண்டு களுக்கும் (65%-க்கு மேல் பங்குகளில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில்) ஒரு வருடத்துக்கு மேல் வைத்திருக்கையில், வரும் லாபத்துக்கு எவ்விதமான வரியும் செலுத்த வேண்டாம். அதேபோல் இந்த இரு வகை ஃபண்டுகளில் இருந்துவரும் டிவிடெண்ட்டுக்கும் எவ்விதமான வரியும் இல்லை.

பேலன்ஸ்டு ஃபண்டுகளில் 35% வரை கடன் சார்ந்த முதலீடுகள் இருப்பதால், சந்தை உச்சத்தில் இருக்கும்போது பங்குகளை விற்றுவிட்டு, பாண்டுகளில் ஃபண்ட் மேனேஜர் முதலீடு செய்துகொள்வார். அதேபோல், சந்தை சரியும்போது பாண்டு களை விற்றுவிட்டு, பங்குகளில் முதலீடு செய்து கொள்வார். இந்த உத்தியை சரியாகக் கையாண் டால், நல்ல வருமானத்தை ஈட்டலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்