தடுமாறும் ஐபிஓ பங்குகள்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஜெ.சரவணன்

ங்குச் சந்தையில் ஒரே நாளில் 50 சதவிகிதத்துக்கும் மேல் பங்கு விலை உயரும் அதிசயம் ஐபிஓ பங்குகளில் மட்டுமே நடக்கும். சமீபத்தில் வெளிவந்த க்வெஸ் கார்ப் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட முதல் நாளன்றே 58% விலை உயர்ந்து வர்த்தகமானது. இந்தப் பங்கு மட்டுமல்ல, சமீபத்தில் ஐபிஓ வெளியிட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட பல  நிறுவனங்களின் பங்குகள் இப்படித்தான் ஆரம்பத்தில் கிடுகிடுவென ஏற்றமடைந்து, அய்யய்யோ, ஐபிஓவில் இந்தப் பங்கை நாம் வாங்காமல் போய்விட்டோமே என்று எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.   

இந்த லாபம் டிரேடர்களுக்கு அல்வா மாதிரி இருந்தாலும், சிறு  முதலீட்டாளர்களைப் பொறுத்த வரை ஏமாற்றத்தையே தருகிறது.அதாவது, ஐபிஓ வந்த பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்ட வுடன் அதிவேகமாக ஏறுகின்றன. பிற்பாடு விலை குறையத் தொடங்கிவிடுகின்றன. கடந்த காலங்களில் ஐபிஓ வந்த பங்குகள் தந்த லாபத்தைப் பார்த்தால், சில அதிர்ச்சிகரமான உண்மைகள் நமக்கு புரியும். 

கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2016 ஜூலை 13-ம் தேதி வரை, மொத்தம் 544 பங்குகள் ஐபிஓ  வந்து சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ளன. இதில் 362 பங்குகள் மட்டுமே பட்டியலிடப்பட்ட அன்று அதிக விலைக்கு லிஸ்ட் ஆகி இருக்கின்றன. இவற்றில், 173 பங்குகள் இப்போது, அதன் வெளியீட்டு விலையைவிட குறை வாக வர்த்தகமாகி வருகின்றன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட பத்து நிறுவனப் பங்குகளை எடுத்துப் பார்த்தோமானால், அதில் பங்கு வெளியிடப்பட்ட விலையைவிட பட்டியலிடப் பட்ட விலை 20-50% வரை அதிகமாக இருந்தன. மேலும், அவற்றில் பத்தில் ஆறு நிறுவனங்களின் தற்போதைய விலை, பட்டியலிடப்பட்ட அன்று உயர்ந்து வர்த்தகமான விலையைக் காட்டிலும் குறைவாகவே வர்த்தகமாகி வருகின்றன.

உதாரணத்துக்கு, கடந்த  ஜனவரி 6-ம் தேதி பட்டியலிடப் பட்ட நாராயணா ஹிருதாலயா ரூ. 250-க்கு பொதுப் பங்கு வெளி யிட்டது. பட்டியலிடப்பட்ட அன்று 34.68% உயர்ந்து, ரூ.336-க்கு வர்த்தகம் ஆனது. ஆனால், தற்போது ரூ.300 - 310 என்ற நிலையில் வர்த்தகமாகிறது.

மே 9-ம் தேதி பட்டியலிடப் பட்ட தைரோகேர் நிறுவனப் பங்குகள் அன்று மட்டும் ஐபிஓ விலையைக் காட்டிலும் 38%  விலை உயர்ந்தது. ஆனால், சில வாரங்களுக்குப் பின்  விலை குறையத் தொடங்கி, தற்போது ரூ.540 -550 என்ற நிலையில் வர்த்தகமாகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்