பங்குகள்... வாங்கலாம் விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர் குரோத் அவென்யுஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

சந்தையின் போக்கு மிகவும் சாந்தமாக இருக்கும் என நாம் எதிர்பார்த்தோம். ஆனால், அது உண்மையில் வேறாக இருக்கிறது. இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் திங்கள் கிழமை, ஏற்றத்தில் வர்த்தகத்தை தொடங்கின. இதனால் இறக்கத்துக்கான எதிர்பார்ப்புகள் இருந்தும் சந்தை பெரிய அளவில் இறங்கவில்லை. அதேநேரத்தில், குறியீடுகள் அதிகரித்து 8600  வரை சென்றன. இதனால் வரும் வாரமும் ஏற்றம் இருக்கும் என வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த வாரத்தில், நிஃப்டியை விட பேங்க் நிஃப்டி அதிகமாக உயர்ந்தது. இது கிட்டத்தட்ட அனைத்து வர்த்தக தினங்களிலும் எதிரொலித்தது.

ஒரு வார காலத்தில் பேங்க் நிஃப்டி 5%க்கும் அதிகமாக அதிகரித்தது. இது நிஃப்டி அதிகரிப்பை விட இரு மடங்கு அதிகம். நிஃப்டி குறியீட்டில் வங்கிப் பங்குகளின் வெயிட்டேஜ் சுமார்  25-27% ஆக இருந்ததால் சந்தை ஏற்றத்தை கண்டது. கடந்த வெள்ளியன்று வெளியான இன்ஃபோசிஸ் நிதி நிலை முடிவுகள் மோசமாக இருந்ததால் ஐடி பங்குகளின் விலை இறக்கம் கண்டு  நிஃப்டி புள்ளிகள் அதிகரிப்பு குறைந்து போனது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்