நிஃப்டி எதிர்பார்ப்புகள்: டெக்னிக்கல்கள் பொய்த்துப்போகும் வாய்ப்புகள் அதிகம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

முதல் காலாண்டு முடிவுகள் வெளிவர ஆரம்பிக்கும் நேரமாதலால் செய்திகளும் நிகழ்வுகளும் மட்டுமே சந்தையை எடுத்துச்செல்லும் எனலாம் என்றும்  டெக்னிக்கலாக மிகவும் வீக்கான சப்போர்ட் லெவல்களே அடுத்தடுத்து இருக்கின்றன என்றும் அதனால் செய்திகள் நெகட்டிவ்வாக வரும் பட்சத்திலும் 8275 லெவலைத் தாண்டி இறங்கினால் 8090 வரையிலுமே சென்று திரும்பு வதற்கான வாய்ப்புகள் டெக்னிக்கலாக இருக்கவே செய்கின்றன என்பதை நினைவில் வைத்தே டிரேடர்கள் வியாபாரம் செய்யவேண்டி யிருக்கும் என்றும் வாரத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் வாலட்டைலிட்டி அதிகரிக்கலாம் என்றும் சொல்லியிருந்தோம்.

8407 மற்றும் 8594 என்ற எல்லைகளுக்குள்ளே வியாபார மான நிஃப்டி, வாரத்தின் மூன்று நாட்களில் ஏற்றத்தையும் இரண்டு நாட்கள் இறக்கத்தையும் சந்தித்து வார இறுதியில் வாராந்திர ரீதியாக 218 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்தது.

பொருளாதார டேட்டா வெளியீடுகள் பெரிய அளவில் இல்லாத வாரத்தினுள் நுழைய இருக்கிறோம். காலாண்டு முடிவுகள் மட்டுமே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும். டெக்னிக்கல் செட் அப் பெரிய அளவில் மாற்ற மில்லாமல் இருப்பதால் கவனத்துடன் டிரேடிங் செய்ய வேண்டியிருக்கும். நெகட்டிவ் செய்திகள் வந்தால் வியாபாரத்தை நிறுத்திக்கொள்வதே நல்லது எனலாம். ஏனென்றால், இது போன்ற சூழ்நிலையில் டெக்னிக்கல்கள் முழுவதுமாக ஒர்க் அவுட் ஆகாமல் போய்விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம் எனலாம்.

ஷார்ட் சைட் வியாபாரத்தை யும் ஓவர்நைட் வியாபாரத்தினை யும் கட்டாயம் தவிர்க்கவேண்டிய கால கட்டம் இது.

வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களின் விவரம் அட்டவணையில் தரப் பட்டுள்ளது. இதையும் கவனத்தில் கொண்டு டிரேடிங் செய்யுங்கள்.

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் – விலைகள் மற்றும் வால்யூம்கள் 15.7.16 வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

கடந்த ஐந்து நாட்கள் டிரேடிங்கை வைத்து வரும் வாரத்துக்கு கவனிக்க உகந்த பங்குகள்:  COX&KINGS-203.35, KOTAKBANK-772.15, MARICO-279.05, HDFCBANK-1223.70, HDFC-1364.10, ELECTCAST-20.50, HINDZINC-196.15, RELIANCE-1012.20, ZEEL-471.95, APOLLOTYRE-156.85, TVSMOTOR-307.35, HINDUNILVR-941.50, MARUTI-4472.05, WELCORP-87.55, GAEL-67.45, BHARTIARTL-378.90, GLENMARK-852.25, STRTECH-93.60, EIHOTEL-117.15, RAMASTEEL-107.85, VOLTAS-325.50, TCI-364.65, TATAMTRDVR-311.55.

ரிலேட்டிவ் மொமொன்டம் ஸ்டடிஸ்  என்ற அளவீட்டில் பார்த்தால் இந்த பங்குகளை டிரேடிங்குக்கு கவனிக்கலாம்:  COX&KINGS-203.35, KOTAKBANK-772.15, HEROMOTOCO-3244.10, CROMPTON-143.80, OBEROIRLTY-301.40, ASIANPAINT-1025.90, MARICO-279.05, HDFCBANK-1223.70, HDFC-1364.10, NATIONALUM-48.20, PFS-40.35, MBLINFRA-144.50, VASCONEQ-31.65, GMDCLTD-82.75, BURNPUR-14.10, ELECTCAST-20.50, COALINDIA-318.85, HINDZINC-196.15,  RELIANCE-1012.20.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்