டிரேடர்களே உஷார் - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.மெகா... மினி... தகுதிக்கு ஏற்ப ரிஸ்க்!

‘‘இன்னிக்கு எப்படியாவது டிரேடிங்கில லாபத்தை பார்த்திடனும்’’ சுகுமாரன், மனசுக்குள்ளேயே சொல்லிக் கொண்டு, லேப்டாப்பை ஆன் பண்ணினார்.

‘‘இப்ப எதுல டிரேட் பண்ணலாம் குரூட் ஆயில் நேத்திக்கும் நல்லா இறங்கிச்சி. அப்ப இன்னக்கும் நல்லா இறங்கும். குரூட் ஆயில் 2730-ஐ உடைச்சி கீழே இறங்கினா, நல்லாதான் இறங்கும்.’’ இது சுகுமாரனின் கணக்கு.

‘‘அடடே, குரூட்  2730 உடைச்சி இறங்குதே. டக்குன்னு ஒரு ஷாட்ட போடு. என்ன விலையில ஷாட்?  2725. குரூட் 10 லாட் மெகா ஷாட் அடிச்சாச்சி. (ஒரு லாட் 100 பேரல். 10 லாட்டு 1000 பேரல். அப்படின்னா, ஒரு ரூபாய் ஏறினா ரூ.1,000 நஷ்டம், ஒரு ரூபா இறங்கினா ரூ.1,000 லாபம்) ஓகே.’’

சுகுமாரனின் கண்கள் ஸ்கிரீனை கூர்மையாக பார்க்க ஆரம்பித்தது. ஒரு  ஷாட் அடித்த பிறகு, விலை சற்றே ஏற ஆரம்பித்தது. விலை ரூ.2726.

டென்ஷன்  ஆகத் தொடங்கினார் சுகுமாரன்.  விலை ரூ.2727. இன்னும் விலை ஏற ஏற டென்ஷன் இன்னும் கூடியது. இப்போது நஷ்டம் எவ்வளவு என்று மனசு கணக்கு போட்டது. ‘இரண்டு பாயின்டு ஏறிடுச்சி... ரூ.2000 நஷ்டம்.’

நஷ்டம்  அதிகமாக அதிகமாக  உடலில் பதற்றம் தொற்றிக் கொண்டது.  விலை ரூ.2729. 4 பாயின்ட் ஏறி,  ரூ.4,000 நஷ்டம்.

‘கடவுளே எப்படியாவது விலையை இறக்கு...’ விலை 2729, 2728, 2727... விலை கொஞ்சம் இறங்கி ஆறுதளித்தது. ரூ.4000 நஷ்டத்திலிருந்து ரூ.2000 ஆக குறைந்தது. விலை 2728, 2729... பின் மீண்டும் விலை ஏறி டென்ஷனை அதிகமாக்கியது. ரூ.4,000 நஷ்டம். கொஞ்சம் விலை மீண்டும் இறங்க ஆறுதல். 

இப்படி ஆறுதல்... டென்ஷன்... என மாறி மாறி வந்து வாழ்க்கையே நரகமானது.  தலை கிறு கிறு என்று சுற்றியது.

விலை கொஞ்சம் இறங்கி விற்ற விலைக்கு 2726 அருகே வர... இப்போ ரூ.1,000 நஷ்டம். அப்போது அவர் மனம் சொன்னது?

‘‘ரெடி... ரெடி.... ரெடி... விலை 2725 என்ற விற்ற இடத்துக்கு வர...  இப்ப வாங்கிடு!’’

அவர் மனம் சொன்னதைக் கேட்டு கபாலென்று பாய்ந்து 2725-ல் வாங்க... விற்ற விலைக்கே வாங்கி, நோ லாஸ் என்று வெளியே வர... அப்பாடா என்றது சுகுமாரனின் மனம்!

உடலில் இருந்த அந்த வலியும் குறைந்து,  மனதில் ஒரு தெளிவு வந்தது. எப்படியோ ஒரு பெரிய லாஸ் ஆகிறதுல இருந்து தப்பித்தோம். நிம்மதி பிறந்து  இப்போது விலையைப் பார்த்தார்.

முன்னாடி விலை ஏறி இறங்கிய மாதிரியே, தொடர்ந்து 2728 - 2729 புள்ளிகள் ஏறியது.  2727, 2726 என சில புள்ளிகள் இறங்கியது.

என்னடா இது, ஒரு 2 - 4 புள்ளிதான் ஏறுது இறங்குது. திரும்ப  இரண்டு புள்ளி ஏறுது? இரண்டு புள்ளி இறங்குது.   என்ன மார்க்கெட் இது?

சுகுமாரன் மொபைல் போன் அடித்தது.  ‘‘என்னடா ரமேஷ், திடீர்னு போன் பண்றே, என்ன விஷயம்? என்னது சும்மாதானா?

நான் என்ன பண்றேனா? டிரேடிங்தான்.   ம்... ம்... நான் டிரேடிங்கல, நெறைய பணம் சம்பாதிக்கிறேன். 

இப்ப எவ்வளவு பண்ணேன்னா கேக்கிறியா?

பெரிசா ஒண்ணும் இல்ல, மார்க்கெட் நகர மாட்டேங்குது.  சும்மா இரண்டு பாயின்ட் ஏறுது, இரண்டு பாயின்ட் இறங்குது.

சுத்த போர். ஓகேடா... நான் அப்பறம் பேசறேன்.  இப்ப மார்க்கெட் நேரம். பை.’’

அப்பாடா வைச்சுட்டான்.  சீக்கிரம், சீக்கிரமாக ஸ்கிரீனை பார்த்தார் சுகுமாரன்.

விலை 2725... அட, மார்க்கெட் நகர மாட்டேங்குதே?

சுகுமாரன் சலிப்புடன் ஸ்கிரீனை பார்த்தார். விலை நகர ஆரம்பித்தது.  

2724, 2723, 2722... பின் விலை தட தடவென்று இறங்க ஆரம்பித்தது. 2720, 2717, 2714, 2712... பின் சடாரென்று வீழ்ந்தது. 2712, 2708. 2703, 2600, 2696, 2690... சுகுமாரன் மனசு ஓலம் இட்டது.  மனசு கணக்கு போட்டது.

நாம 2725-ல ஷாட்... இப்போ 2690-ல இருக்கு.  மொத்தம் 35 பாயின்டு இறங்கி இருக்கு. நாம ஒரு அரைமணி நேரம் பொறுத்து இருந்தா, இப்போ 35 பாயிண்ட் X 1000  =  ரூ.35000 லாபம் பாத்திருக்கலாம். நல்ல வாய்ப்பு போச்சே. போன வாரம் வந்த லாஸை சரிகட்டி இருக்கலாம்.

ஹூம்.... சுகுமாரனின் பெருமூச்சு, டேபிள் மேல் இருந்த பேப்பரை எல்லாம் பறக்க வைத்தது. இப்ப என்ன பண்ணலாம்?

குரூட் ஆயில்  2725-ஐ உடைத்து கீழே இறங்கினால், வலிமையாக இறங்கும் என்று கணித்து இருந்தார். அவர் கணித்தபடியே வலிமையாக இறங்கவும் செய்தது. ஆனால், அவர் அந்த ஆட்டத்தில் இல்லை. சுகுமாரன் கணிப்புபடி விலை இன்னும் இறங்கலாம். அதாவது, அடுத்த டார்கெட் 2655 என்று கணித்து இருந்தார். இதுவரை கணித்தது, சரியாக இருக்கும் போது, அடுத்த இலக்கும் வர வாய்ப்பு இருக்கிறதுதானே!

சுகுமாரன் மனதில் இந்த கருத்து மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டு இருந்தது.  குரூட் ஆயில் 2725-ல் இருந்து கீழே இறங்கிய வாய்ப்பைதான் நழுவ விட்டுவிட்டோம். குறைந்தபட்சம், அடுத்த இறக்கமான 2690-ல் இருந்து வீழ்ந்தால் 2655 நோக்கி போகும் என்ற வாய்ப்பையாவது பயன்படுத்தலாமே. விடாதே பிடி... அடுத்த வாய்ப்பை பிடி... உள்ளே எண்ணங்கள் ஓட ஓட சுகுமாரன் டப்பென்று 2690-ல் பத்து மெகா லாட்டை விற்றார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்