லாபம் தரும் தொழில்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நல்ல லாபம் தரும் நான் - ஓவன் பேக்ஸ்!த.சக்திவேல்

கையும் பையுமாக இருப்பது மனிதனின் இயல்பு. எந்த இடத்துக்குப் போக வேண்டும் என்றாலும் கையில் ஒரு பையை எடுத்துக்கொண்டு போகிறோம். ஆனால், சமீப காலமாக இந்த வழக்கம் இளைய தலைமுறையிடம் குறைந்து வருகிறது. தவிர, பொருட்களை வாங்க வருகிறவர்கள் எல்லோரும் கையில் பையுடன் வரவேண்டும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. எனவே, வாங்கும் பொருட்களை எடுத்துக் கொண்டு செல்லத் தேவையான பையை பொருட்களை விற்கும் நிறுவனமே கொடுப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் மனதைக் கவர நினைக்கின்றன.

இப்படி தரும் பைகள் அதிக விலை இல்லாமலும், அதே நேரத்தில் பார்ப்பதற்கு அழகாகவும், பயன்படுத்த வசதியாகவும் இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றுகிற மாதிரி இருக்கின்றன நான்-ஓவன் பேக்ஸ் பைகள்!

 இன்றைக்கு பெரும்பாலான துணிக்கடையில் நாம் வாங்கும் துணிமணிகளை நான்-ஓவன் பேக்கில்தான் போட்டுத் தருகிறார்கள். மருத்துவமனையில் நம்முடைய உடல் சம்பந்தமான தகவல்கள் அடங்கிய ஃபைல் களைகூட நான்-ஓவன் பேக்கில் வைத்துத்தான் தருகிறார்கள். காய்கறி, மளிகைச் சாமான்கள் வாங்கவும், கோவிலுக்கு தேங்காய், பழம் கொண்டு போகவும் இந்தப் பைகளைத் தான் மக்கள்  அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்