Zero to Hero 2.0 - 11

சாதிக்கும் பிசினஸ்மேன்கள்!சவால்களில் வாய்ப்புகளைக் கண்டுபிடித்தால் வெற்றி நிச்சயம்!ஜெ.சரவணன்

மாதக் கடைசியில் வீட்டு செலவுகளைச் சமாளிக்கவே திண்டாடிய குடும்பத்தில் பிறந்து, கல்லூரியில் படித்து முடிக்கும்வரை தான் என்னவாக ஆக வேண்டும் என்றுகூட யோசிக்காத ஒருவர், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்படும் முதல் தனியார் வங்கிக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அவர்தான் எக்விடாஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி.என்.வாசுதேவன். ஜீரோவில் தொடங்கி இன்று ஹீரோவாக இருக்கும் அவரது வாழ்க்கை கதையை அவரே சொல்கிறார்.

இரண்டு முறை ஆறாம் வகுப்பு!


“என் அப்பா சமஸ்கிருத வாத்தியார். அம்மா வீட்டை கவனித்து வந்தார். அப்பாவின் சொற்ப சம்பளத்தில் காலத்தைத் தள்ளினோம். அம்மா பெரிதாக படித்தவரில்லை. என்றாலும், எங்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார்.   

ஆறாவது வரை தமிழ் மீடியத்தில் படித்தேன். ஐஐடியில் உள்ள கேந்திரா வித்யாலயாவில் ஏழாம் வகுப்பில் சேர நுழைவுத் தேர்வு எழுதினேன். ஆனால், பாஸாகவில்லை. எனவே, என்னை ஆறாம் வகுப்பிலேயே சேர்த்துவிட்டார்கள். இதனால் இரண்டு முறை ஆறாம் வகுப்பு படித்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்