கமாடிட்டி டிரேடிங்! மெட்டல் & ஆயில்

ஜெ.சரவணன்

கச்சா எண்ணெய்!

கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. புதன்கிழமை அன்று மட்டும் சிறிய ஏற்றம் கண்டது. கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில் 46.7 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் கடந்த திங்களன்று 45.9 டாலராகக் குறைந்தது. கச்சா எண்ணெய் விலை சரிவுக்குக் காரணம், கச்சா எண்ணெய் மீது முதலீட் டாளர்களின் நம்பிக்கை குறைய ஆரம்பித்ததுதான்.

எண்ணெய் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடான ஈராக்கின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி இரண்டு மாத சரிவுக்குப் பிறகு தற்போது ஏற்றமடைய தொடங்கியிருக்கிறது. ஜூலை மாதத்தில் இதுவரை ஒரு நாளைக்கு சராசரியாக 3.28 மில்லியன் பேரல்கள் ஏற்றுமதி செய்துள்ளது. உள்நாட்டில் கச்சா எண்ணெய் நுகர்வு குறைந்துள்ளதால், ஈராக் தனது ஏற்றுமதியை அதிகரித்திருக்கிறது.

ஈராக் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா உற்பத்தி செய்த கச்சா எண்ணெய் கிடங்குகளில் தேக்கமடைந்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து வரும் நிலையில் மற்ற நாடுகள் தங்களது உற்பத்தியை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்தியாவும் கச்சா எண்ணெய் தொடர்பான உற்பத்தியைக் கணிசமாகக் குறைத்து வருகிறது.

இதன் காரணமாக முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய்யில் முதலீடு செய்ய தயக்கம் காட்டி வருகிறார்கள். இது வரும் வாரங்களிலும் தொடரும் என்பதால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைய வாய்ப்புள்ளது.

தங்கம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்