யானைப் பசிக்கு சோளப்பொரி!

மிகப் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு, விருந்துக்கு வந்தவர்களுக்கு கால தாமதமாக உணவைப் பரிமாறுவதுடன் அதை அரை வயிறும் கால் வயிறுமாகப் போட்டால், விருந்துக்கு வந்தவர்களின் நிலை எப்படி இருக்கும்? ஏறக்குறைய இந்த நிலையில்தான் அரசுப் பொதுத் துறை வங்கிகள் இருக்கின்றன.

வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க மத்திய அரசாங்கம் ரூ.22,915 கோடியைத் தந்துள்ளது. எப்போதோ தந்திருக்க வேண்டிய இந்தத் தொகையை மத்திய அரசாங்கம் இப்போதாவது தந்ததே என்று மகிழ்ச்சி அடையலாம். என்றாலும் இந்தத் தொகை யானைப் பசிக்கு சோளப்பொரி போடுகிற மாதிரிதான்.  காரணம், வங்கிகளின் வாராக் கடன் நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துவிட்ட நிலையில், மத்திய அரசாங்கம் இப்போது தந்திருக்கும் தொகை வங்கிகளின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவாது.  

வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க மத்திய அரசாங்கம் 25,000 கோடி ரூபாய் தருவதாக முதலில் சொல்லி இருந்தது. ஆனால், சொன்னதைவிட சுமார் ரூ.2,000 கோடி குறைவாகவே தந்துள்ளது. இந்தத் தொகையும் 13 பொதுத் துறை வங்கிகளுக்கு பிரித்துத் தரப்பட்டுள்ளது. இதில் எஸ்.பி.ஐ. வங்கிக்கு அதிகபட்சமாக ரூ.7,575 கோடி தரப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் கடன் தேவையை சமாளிக்க அந்த வங்கிக்கு மட்டுமே சுமார் ரூ.50,000 கோடி தேவை  என்கிறபோது இப்போது தரப்பட்டுள்ள தொகை ஒன்றுக்கும் உதவாது எனலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்